வியாழன், 18 ஜூலை, 2019

சரவணபவ மந்திரம் விளக்கம்

முருகனுக்கு “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரமே சிறப்பான மந்திரமாக கருதப்படுகிறது. இதில் வெறும் ஆறெழுத்துக்கள் தான் இருக்கிறது என்றாலும் கூட இதில் ஆறு மந்திரங்களும் ஆறு விதமான பலன்களும் ஒளிந்துள்ளன. ஒவ்வொரு கடவுளுக்கும் சிறப்பான ஒரு மந்திரம் இருப்பது போல தமிழ் கடவுளான முருகனுக்கு “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரமே சிறப்பான மந்திரமாக கருதப்படுகிறது. இதில் வெறும் ஆறெழுத்துக்கள் தான் இருக்கிறது என்றாலும் கூட இதில் ஆறு மந்திரங்களும் ஆறு விதமான பலன்களும் ஒளிந்துள்ளன. இதோ அந்த மந்திரம்

சரவணபவ மந்திரம் விளக்கம்

1. சரஹணபவ – என மனமுருகி ஜபித்து வந்தால் “சர்வ வசீகரம் உண்டாகும்”.

2. ரஹணபவச – என மனமுருகி ஜபித்து வந்தால் “செல்வமும் செல்வாக்கும் பெருகும்”.

3. ஹணபவசர – என மனமுருகி ஜபித்து வந்தால் “பகை,பிணி நோய்கள் பறந்தோடும்”.

4. ணபவசரஹ – என மனமுருகி ஜபித்து வந்தால் “எதிர்ப்புகள் நீங்கும், எதிரிகளாக உண்டாகும் தொல்லைகள் நீங்கும்”.

5. பவசரஹண – என மனமுருகி ஜபித்து வந்தால் “இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவன்களும் நம்மை விரும்பும்”.

6. வசரஹணப – என மனமுருகி ஜபித்து வந்தால் “எதிரிகளின் சதி,அவர்களால் வரும் தீமைகள் யாவும் செயலற்றுப்போகும்”.

இந்த ஆறு மந்திரங்களில் உள்ள பலன்களில் எதை நீங்கள் பெற விரும்புகிறீர்களோ அதற்கான மந்திரத்தை கிருத்திகை நட்சத்திரத்தன்றோ அல்லது செவ்வாய் கிழமை அன்றோ சொல்ல துவங்கி பின் தினமும் ஜபித்து வர வேண்டும். தினமும் இந்த மந்திரத்தை குறைந்தது 108 முறையாவது ஜெபிக்கவேண்டும். மந்திரத்தை ஜெபிக்கும்போது சிந்தையில் முருகனை தவிர வேறெதுவும் இருக்க கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812