திங்கள், 18 ஏப்ரல், 2011

அறநெறி அறிவுநொடி



கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர், ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்


(மேற்பிரிவு)


8456) மலைகிழவோன் என அழைக்கப்படுவர் யார்?

முருகப்பெருமான்

8457) மலையும் மலை சார்ந்த கடவுள் என்பதால் முருகனை தமிழ் நூல்கள் வேறு எவ்வாறு அழைக்கின்றன?

குறிஞ்சிக் கிழவன்.

8458) யான் எனது என்ற அகந்தை அற்ற அடியவர்களிடம் முருகன் தானே வந்து அருள் புரிவான் என்ற தத்துவத்தை விளக்குவது எது?

வள்ளித் திருமணம்

8459) முருகனுக்குச் சிறப்பாக அமைந்த படை எது?

வேலாயுதம்

8460) முருகவேளுக்குரிய மந்திரம் ஆறு எழுத்து - அதனை என்னவென்று கூறுவர்?

சடாட்சரம்

8461) முருகப் பெருமான் மருவும் அடியவர் மனதில் உறைவதால் அவரை என்ன பெயர் கொண்டு அழைப்பர்?

குகன்

8462) திருமுறை என்ற தொடரில் ‘திரு’ என்பது எதனைக் குறிக்கும்? தெய்வத்தன்மையை

8463) மலம், பந்தம், தளை என அழைப்பது எதனை?

பாசத்தை

8464) நாதம், விந்து, சாநாக்கியம், ஈசுவரம், சுத்தவித்தை என்பவற்றை என்னவென்று கூறுவர்? சிவதத்துவம்

8465) இராவணனின் தாயின் அபரக்கிரியைகள் செய்வதற்காக அமையப்பெற்றது எது?

திருகோணமலையிலுள்ள கன்னியாய் தீர்த்தம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812