திங்கள், 4 ஏப்ரல், 2011

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர்/ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்

(திருமூலர், திருமந்திரம் 7 ஆம் வகுப்பு சைவபோதினி)


8438) பன்னிரு திருமுறைகளுள் சைவ சமய சாத்திர ரூபமானது எது?

திருமந்திரம்

8439) தமிழில் முதலில் உண்டான சைவ சமய சாத்திரம் என்று கருதப்படுவது எது?

திருமந்திர்

8440) திருமந்திரம் எதனை அடிப்படையாகக் கொண்ட நூல்?

வேதாகமங்களின் முடிவை

8441) சிவானுபவத்துக்கு இன்றியாத சாதனம் எது?

அன்பு நெறி (பக்தி மார்க்கம்)

8442) திருமந்திரத்தை அருளியவர் யார்?

திருமூலர்

8443) திருமூலர் யாருக்கு மாணவராயிருந்தார்?

திருநந்தி தேவருக்கு

8444) திருமூலர் திருநந்தி தேவருக்கு எங்கு மாணவராய் இருந்தார்?

திருக்கைலாய மலையில்

8445) சிவானுபவத்துக்கு இன்றியாத சாதனம் அன்பு நெறி என்பதை உணர்த்தியவர் யார்?

திருமூலர்

8446) பன்னிரு திருமுறைகளுள் திருமந்திரம் எத்தனையாம் திருமுறை?

பத்தாம்

8447) திருமூலர் என்ற சிவயோகி யாருடன் வசிக்க பொதியமலை நோக்கி வந்தார்?

அகத்திய முனிவரோடு

8448) திருமூலர் பொதியமலை நோக்கி செல்லும் போது எங்கு தங்கிச் சென்றார்?

திருவாவடுதுறையில்

வாழைப்பழ ரகசியம்


8448) சுவாமிக்கு வாழைப்பழம் படைக்கப்படுவது ஏன்?

எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள் மற்ற எந்த பழத்தை எடுத்தாலும் சாப்பிட்டுவிட்டு கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால் வாழைப்பழத்தை உரித்தோ முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையை காட்டுகிறது. மீண்டும் பிறவாமை வேண்டும் என்பதற்காகத் தான் சுவாமிக்கு வாழைப்பழம் படைக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812