திங்கள், 25 ஏப்ரல், 2011

அறநெறி அறிவுநொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர், ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்


(மேற்பிரிவு)


8466) ஏழு துளைகளையுடைய வாத்தியம் எது?

நாதசுரம்.

8467) பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங் கோட்டம் இல்லது
நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே
ஆவினுக்கு என்பது என்ன?

பசு

8468) அரனஞ்சாருதல் என்பது என்ன?

பஞ்ச கவ்வியங்களால் இறைவன் மஞ்சனம் ஆடுதல்

8469) சம்பந்தர் பொற்றாளம் பெற்றது எந்த பதிகத்தை பாடி?

மடையில் வாளை

8470) சுக்கிர வாரம் என்பதன் பொருள் என்ன?

வெள்ளிக்கிழமை.

8471) இறைவன் உலகம் முழுவதை யும் ஒடுக்கி நிற்கும் காலத்தை என்னவென்று கூறுவர்?

இருட்காலம், பிரளய காலம், ஊழி முடிவு, சர்வசம்மார காலம்.

8472) ஆதிரையில் முதல்வன் என்று அழைப்பது யாரை?

சிவபெருமானை

8473) சூரியன் கன்னி இராசியில் செல்வது எந்த மாதம்?

புரட்டாதி

8474) திருவிசைப்பா, திருப்பல்லாண்டு என்பன எத்தனையாம் திருமுறையில் உள்ளன?

ஒன்பதாம்

8475) சிவபெருமானது சிறந்த பொருள் சேர் புகழைக் கூறும் அருட்பா எது?

திருவிசைப்பா

8476) பல ஆண்டுகள் வாழ்க என மெய்யடியார்கள் வாழ்த்துவர். அங்ஙனம் வாழ்த்திக் கூறும் அருட்பாவை என்னவென்று கூறுவீர்?

திருப்பல்லாண்டு

8477) திருப்பல்லாண்டுத் திருப்பதிகம் பாடியருளியவர் யார்?

சேற்தனார்

8478) சிதம்பரத் தேர்த்திருவிழாவிலே ஓடாது நின்ற தேரை ஓடச் செய்யும் பொருட்டுப் பாடியருளப்பட்ட திருப்பதிகம் எது?

ஆரார் வந்தார் அமரர் குழாத்தில்...

8479) சிவனடியே சிந்திக்குந் திருப்பெருகு சிவஞானம்.... என்ற பதிகம் யார் பெற்ற ஞானத்தைப் பற்றி கூறுகி றது?

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

8480) ‘தொண்டர்சீர் பரவுவார்’ என்ற சிறப்புப் பெயரை பெற்றவர் யார்?

சேக்கிழார்

8481) சேக்கிழாருக்கு கிடைத்த வரிசை பெயர் என்ன?

உத்தம சோழப் பல்லவன்

8482) அருணகிரிநாதர் எத்தனையாம் நூற்றாண்டில் அவதரித்தவர்?

15 ஆம் நூற்றாண்டில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812