திங்கள், 11 ஏப்ரல், 2011

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர்/ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்


8450) திருமணங்களில் புதுமணம் பரப்பி விளக்கு ஏற்றி வயதில் மூத்த பெண்கள் மணப் பெண்ணை நீராட்டி வாழ்த்தி, அவள் விரும்பியவனுடன் அவளை ஒப்படைத்தது எந்தக் காலத்தில்?

சங்ககாலத்தில்


8451) ‘தாலி’ என்ற பதம் எந்த சொல்லில் இருந்து வந்தது?

தாலம்


8452) எத்தனையாம் நூற்றாண்டில் திருமணச் சின்னம் என்ற ரீதியில் தாலி பெயர் உபயோகப்படுத்தப்பட்டது?

பதினோராம் நூற்றாண்டில்


8453) மாங்கல்யச் சரடு எத்தனை இழைகளைக் கொண்டது?

ஒன்பது


8354) மாங்கல்யச் சரடின் ஒன்பது இழைகளும் எதனை குறிக்கிறது?

9 குணங்களை


8455) அந்த 9 குணங்களையும் தருக.


தெய்வீகம், தூய்மை, மேன்மை, தொண்டு, தன்னடக்கம், ஆற்றல், விவேகம், உண்மை, உள்ளதை உள்ளபடி புரிந்துகொள்ளுதல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812