திங்கள், 2 மே, 2011

அறநெறி அறிவுநொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர், ஸ்தாபகர் தமிழர் நற்பணி மன்றம்


(திருக்கோணேஸ்வரம்) (மத்திய பிரிவு)


8483) இலங்கையின் வடகிழக்குப் பாகத்திலே கடற்கரையில் உள்ள ஆலயம் எது?

திருகோணசுவரம்

8484) வட கைலையிலிருந்து பெயர்த்துத் தென்கடலில் இடப்பட்ட சிகரம் என போற்றப்படுவது எது?

திருகோணமலை

8485) இது வட கைலையின் சிகரமாய் பரத கண்டத்தின் தென் பாகத்தில் இருப்பதால் எவ்வாறு அழைக்கப்படும்?

தட்சிண கைலாசம்

8486) இந்த தட்சிணா கைலாசத்துக்குரிய வேறு பெயர்கள் என்ன?

திரிகோணமலை, சுவாமிமலை

8487) இதற்கு ‘திருகோணமலை’ என பெயர் வரக் காரணம் என்ன?

பழைய ஆலயமிருந்த மலைப்பிரதேசம் முக்கோண வடிவான விசாலமுடையதாலும் மூன்று மலைகள் முக்கோண வடிவிற் சூழ்ந்தமையாலும் ஆகும்.

8488) திருகோணமலை தலத்தின் மீது பதிகம் பாடியவர் யார்?

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார்.

8489) இலங்காபுரியிலிருந்து வந்து நாள் தோறும் கோணேசுவரரை வழிபட்டு வந்தவர் யார்?

இராவணனுடைய தாய்

8490) இராவணன் தனது தாய்க்காக திருகோணமலையை என்ன செய்ய முயற்சித்தார்?

பெயர்த்து தலைநகருக்கு தூக்கிச் செல்ல முயற்சித்தார்.


8491) இராவணன் என்ன பாடி ஈசனருளைப் பெற்றார்?

சாமகானம்

8492) இராவணன் தன் தாய்க்கு அந்திமக் கடன் செய்த இடம் எது?

கன்னியா ஊற்று

8493) கோணேசர் கோயிலைக் கட்டியவர் யார்?

வரராம தேவன் என்ற மன்னன்

8494) இவர் எந்த நாட்டை ஆண்டவர்?

சோழ நாட்டை.

8495) வரராமதேவன் இறந்தபின் கோணேசர் ஆலய திருப்பணியை நிறைவு செய்தவன் யார்?

வரராம தேவனின் மகன் குளக்கோட்ட மகாராசன்

8496) வரராம தேவனின் மகனுக்கு குளக்கோட்டன் என பெயர் வரக் காரணம் என்ன?

கோணேசர் குளத்தையும் கோட்டத்தையும் கட்டுவித்ததால்

8497) இங்கு கோட்டம் என்று எதனை குறிப்பிடுகின்றனர்?

கோணேசர் கோயிலை

8498) குளக்கோட்டன் கட்டுவித்த குளம் எது?

கந்தளாய் குளம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812