திங்கள், 31 அக்டோபர், 2011

கம்போடியாவில் 500 ஏக்கரில் உலகின் மிகப்பெரிய இந்துக்கோயில்








“மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்” என்ற வாக்கிற்கிணங்க உலகம் முழுவதும் நம்முடைய சமயம், கலை, பண்பாடு பரவியிருந்ததன் வெளிப்பாடே திருக்கோவில்கள்.

கம்போடியா நகரில் 1200க்கு மேற்பட்ட கோவில்கள் இந்து சமயக் கலாசாரத்தின் வெளிப்பாடாக ஓங்கி நிற்கின்றன.

உலகின் மிகப் பெரிய கோவிலாக விளங்குகிறது அங்கோர்வாட் (தினிமிறிலிஞி- தீதிஹி) கோவில் மேரு.

ஐந்நூறு ஏக்கர் சுற்றளவு நிலப்பரப்பில் 3 ஆயிரம் கோடி தொன் கருங்கல்லால், 10 இலட்சம் பணியாளர்களால் 40 ஆண்டுகளில் கட்டப்பட்ட திருக்கோவில் இது.

இரண்டாம் ஜெயவர்மன் (790 – 835) முதல் ஜெயவர்மன் பரமேஸ்வரா (1327) வரை உள்ள பல மன்னர்களால் கட்டப்பட்டவை.

திருக்கோவிலைச் சுற்றியும் அகழி. அடுத்து பிரகார மண்டபம். அதனுள் திருக்குளம். 60 படிகள் மேல் ஏறினால் அட்டதிக்கிலும், திக்குபாலகர்கள். மேலே 60 படிகள் ஏறினால் நான்கு மூலையிலும் சிவலிங்கங்கள், மையத்தில் அற்புதமான சிவலிங்கம் (தற்போது நூதனசாலையில் உள்ளது) 60 அடி விமானம், 500 ஏக்கரில் திருக்கோவில் அமைக்க எத்தனை ஆழம், அகலம் கொண்டு அஸ்திவாரம் செய்திருப்பார்கள். வெளவால் நெற்றி மண்டபத்தில் இராமாயணம், பாரதப் போர்கள், பீஷ்மர் அம்புப் படுக்கை, திருப்பாற்கடல் கடைதல், அப்ஸரஸ் பெண்களின் நடனம், மனித வாழ்வியல் நெறிகள் என கருங்கல் புடைப்புச் சிற்பங்கள் சமஸ்கிருத எழுத்து, கல்வெட்டு ஆகியவற்றை நினைத்துப் பார்க்கவே மனம் அதிசயிக்கிறது. மன்னனின் மனம் போல உயர்ந்து நின்ற திருக்கோவில் 200 ஆண்டுகளாக வழிபாடின்றி இருக்கிறது.

ஜப்பான், ஜெர்மன்காரர்கள் திருப்பணி செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். கர்ப்பகிரஹத்தில் இருக்க வேண்டிய மூர்த்தங்கள் காட்சியகத்தில் இருக்கின்றன.

யாமும் சிவஸ்ரீ சிவக்குமார் பட்டர் (மதுரை சொக்கநாதப் பெருமானைத் தீண்டிப் பூசிக்கும் பேறு பெற்றவர்.

மலேசியா கோர்ட் மலைப்பிள்ளையார் கோவில் தலைமை அர்ச்சகராக உள்ளார்.)

இந்த அதிசய, அற்புத ஆலயத்தை நாமும் கண்டு தரிசித்து வந்தால் மேருவை வலம் வந்த புண்ணியம் கிட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812