திங்கள், 2 ஏப்ரல், 2012

அறநெறி அறிவுநொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர்/ஸ்தாபகர் தமிழர் நற்பணி மன்றம்

இறை திருவுருவங்கள்

9022) கோயில்களில் இறைவனின் திருவுருவங்களை எந்த கோலங்களில் படைப்பர்?

நின்ற, இருந்த, கிடந்த மற்றும் கூத்தாடிய
கோலங்களில் படைப்பர்.

9023) இவற்றில் நின்ற கோல இறையுருவை என்னவென்று கூறுவர்?

ஸ்தானகமூர்த்தி என்று

9024) ஒரு காலை மடக்கி ஒரு காலை கீழ்நோக்கி நீட்டியபடி அமர்ந்திருப்பதை என்னவென்று கூறுவர்?

சுகாசனமூர்த்தி என்று

9025) கிடந்த கோலத்தில் இருக்கும் இறையுருவை என்ன வென்று கூறுவர்?

சயனமூர்த்தி என்று

9026) நடனமாடும் கோலத்தில் உள்ள இறையுருவை என்னவென்று கூறுவர்?

நிருத்தமூர்த்தி என்று

9027) சிற்பங்களில் இருந்த கோலத்தில் எத்தனை ஆசனங் கள் பயன்படுத்தப்படுகின்றன?

ஆறு ஆசனங்கள்

9028) சிற்பங்களில் பயன்படுத்தப்படுகின்ற அந்த ஆறு ஆசனங்களையும் தருக.

சுகாசனம், வீராசனம், பத்மாசனம், அர்த்தபத்மாசனம், யோகாசனம், லலிதாசனம் என்ற ஆறு ஆசனங்கள் சிற்பங்க ளில் பயன்படுத்தப்படுகின்றன.

9029)கிடந்த கோலம் எத்தனை வகைப்படும்?

இரு வகைப்படும்

9030)அந்த இருவகை கிடந்த கோலங்களையும் தருக

சமசயனம், அர்த்த சயனம்

9031)சமசயனம் என்பது எதனை?

கிடந்த கோலத்தில் கிடத்தலை

9032)அர்த்த சயனம் என்பது எதனை?

பகுதிக் கடத்தல்

9033)கிடந்த கோலம் எந்த தெய்வத்துக்கு உரித்தான கோலம்?

விஷ்ணுவுக்கு

9034)அடி முதல் முடி வரை உடல் முழுவதும் இருக்கையில் கிடப்பது எந்த சயனம்?

சமசயனம்

9035)அடி முதல் இடைவரையுள்ள உடல் கிடந்து அதற்கு மேலுள்ள உடல் பகுதி சற்று நிமிர்ந்திருப்பது எந்த சயனம்?

அர்த்தசயனம்

9036)கூத்தாடிய கோலம் எந்த தெய்வ சிற்பங்களுக்கு உரியதாக உள்ளது?

சிவபெருமான், காளி, பிள்ளையார், கண்ணனது காளிங்க நர்த்தனம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812