செவ்வாய், 10 ஏப்ரல், 2012

அறநெறி அறிவுநொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர்/ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்

இறை திருவுருவங்கள்

9029) கிடந்த கோலம் எத்தனை வகைப்படும்?

இரு வகைப்படும்

9030) அந்த இருவகை கிடந்த கோலங்களையும் தருக

சமசயனம், அர்த்த சயனம்

9031) சமசயனம் என்பது எதனை?

கிடந்த கோலத்தில் கிடத்தலை

9032) அர்த்த சயனம் என்பது எதனை?

பகுதிக் கிடத்தல்

9033) கிடந்த கோலம் எந்த தெய்வத்துக்கு உரித்தான கோலம்?

விஷ்ணுவுக்கு

9034) அடி முதல் முடி வரை உடல் முழுவதும் இருக்கையில் கிடப்பது எந்த சயனம்?

சமசயனம்

9035) அடி முதல் இடைவரையுள்ள உடல் கிடந்து அதற்கு மேலுள்ள உடல் பகுதி சற்று நிமிர்ந்திருப்பது எந்த சயனம்?

அர்த்தசயனம்

9036) கூத்தாடிய கோலம் எந்த தெய்வ சிற்பங்களுக்கு உரியதாக உள்ளது?

சிவபெருமான், காளி, பிள்ளையார், கண்ணனது காளிங்க நர்த்தனம்.

அட்ஷய திருதி

9037) அட்சய திருதியை எப்போது வரும்?

சித்திரை மாதம் அமாவாசைக்கு மூன்றாம் நாள்

9038) அட்சய திருதியை அன்று என்ன செய்வது நல்லது?

ஆலயங்களுக்குச் சென்று இறையருள் பெறுவது நல்லது

9039) அன்று நல்லது செய்தால் என்ன நடக்கும்?

நல்லது எது செய்தாலும் ஒன்றுக்கு மூன்றாக இறைவன் பலன் கொடுப்பார்.

9040) க்ஷயம் என்றால் என்ன?

தேய்தல், குறைந்து போதல், மறைதல்.

9041) அக்ஷயம் என்றால் என்ன?

வளர்தல், நிறைதல்.

9042) திருதியை என்றால் என்ன?

மூன்றாவது நாள் என்பதாகும்.

9043) திதி என்பது என்ன?

நாள், தினம்

9044) திதிகளில் சிறப்புப் பெற்றது எது?

அட்சய திருதியை

9045) திதிகளில் சிறப்புப் பெற்றது அட்சய திருதியை என்று கூறியவர் யார்?

மகாகவி காளிதாசர்

9046) அட்சயம் என்றால் என்ன?

வளருதல்

9047) அள்ள அள்ள வளர்ந்து கொண்ட பாத்திரம் எது?

அட்சய பாத்திரம்

9048) அள்ள அள்ள வளர்வது அட்சய பாத்திரம் போல் அட்சய திருதி என்பது எது?

செல்வத்தை மென்மேலும் வழங்கக் கூடியது.

9049) அட்சய திருதியையன்று பூஜிக்க வேண்டிய தெய்வங் கள் எவை?

மஹாவிஷ்ணு, மஹா லக்ஷ்மி, பரமசிவன், பார்வதி, அன்னபூரணி, கலைமகள், குபேரன்.

9050) கண்ணன் அவலை என்ன சொல்லி சாப்பிட்டார்?

அட்சயம்

9051) கண்ணன் அட்சயம் என்று சொல்லிவிட்டு சாப்பிட்டதால் என்ன நடந்தது?

அஷ்ட லட்சுமிகளும் குசேலர் வீட்டிற்கு வந்ததாகக் கதை.

9052) இந்த சம்பவம் நடந்தது எந்த தினத்தில்?

அட்சய திருதியை தினத்தில்

9053) அட்சய திருதியை அன்று குசேலர் சரித்திரத்தைப் பார்த்தால் என்ன நடக்கும்?

குடும்பத்தில் வறுமை நீங்கும் என்பது ஜதீகம்.

9054) மஹாலட்சுமி மஹா விஷ்ணுவின் மார்பில் இடம் பிடித்த தினம் எது?

வளர்பிறை திருதியை

9055) அமாவாசையாகத் தேய்ந்து போய்க் கொண்டிருந்த சந்திரன் வளர்பிறையாக மாறக் காரணமானவர் யார்?

சிவன்

9056) சிவன் ஆசியளித்த தினமானது அட்சயம் என்ற சொல்லுடன் இணைந்து என்னவாக சிறப்புற்றது?

அட்சய திருதியையாக

9057) குலேசன் சரித்திரத்தில் கிருஷ்ண பரமாத்மாவின் பால்ய தோழர் யார்,

குசேலர்

9058) குசேலர் கிருஷ்ணருக்கு என்ன கொடுத்தார்?

அவல்

9059) மஹாபாரதத்தில் இராஜ சபையில் பாஞ்சாலியின் துகிலை உரிய ஆரம்பித்தவர் யார்?

துச்சாதனன்

9060) துச்சாதனன் துயில் உரிய ஆரம்பித்தவுடன் பாஞ்சாலி என்ன செய்தாள்?

தன் மானம் காக்க கதறி அழுதாள்.

9061) அவளின் அபயக் குரல் கேட்ட கண்ணன் என்ன செய்தான்?

அங்கேயே இருந்து அட்சயம் என்று சொன்னான்.

9062) கண்ணன் அட்சயம் என்று சொன்னவுடன் என்ன நடந்தது?

திரெளபதியின் புடவை குறைவில்லாமல் வளர்ந்தது.

9063) இந்த சம்பவம் நடந்த தினம் எது?

அட்சய திருதியை அன்று

9064) அன்னபூரணி உலகிற்கு அன்னம் அளிக்க ஆரம்பித்த தினம் எது?

திருதியை தினம்

9065) பாண்டவர்கள் காட்டில் இருந்தபோது அன்ன பஞ்சம் தீர்க்க கண்ணன் அட்சய பாத்திரம் அளித்த தினம் எது?

திருதியை தினத்தில் தான்

9066) குபேரன் சிவனருளால் சகல ஐஸ்வரியத்தை அடைந்த தினம் எது?

திருதியை தினம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812