திங்கள், 16 ஏப்ரல், 2012

அறநெறி அறிவுநொடி

கே. ஈஸ்வரலிங்கம்,
தலைவர்/ஸ்தாபகர்
தமிழர் நற்பணி மன்றம்

(அட்டமா சித்திகள்)

9067) அட்டமா சித்திகள் எவை?

அணிமா, மகிமா, இலகிமா, கரிமா, பிராத்தி, பிரகாமியம், ஈசத்துவம், வசித்துவம்.

9068) அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல் எது?

அணிமா

9069) மலையைப் போல் பெரிதாதல் எது?

மகிமா

9070) காற்றைப் போல் இலேசாய் இருத்தல் எது?

இலகிமா

9071) மலைகளாலும் வாயுவினாலும் அசைக்க முடியாமல் பாரமாய் இருத்தல் எது?

கரிமா

9072) மனத்தினால் நினைத்தவை யாவும் தன் முன்னே அடைய அவற்றைப் பெறுவது எது?

பிராத்தி

9073) கூடு விட்டு கூடு பாய்தல் எது?

பிரகாமியம்

9074) நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்து வதை என்னவெண்பர்?

ஈச்சத்துவம்

9075) அனைத்தையும் வசப்படுத்தும் செயலை என்ன வென்பர்?

வசித்துவம்

(சித்ரா பெளர்ணமி)

9076) ஒரு தடவை விளையாட்டாக ஓவியம் ஒன்று வரைந்த அன்னை யார்? பார்வதி தேவி

9077) இந்த ஓவியத்தை பார்த்து பார்வதி தேவியின் தோழியர்கள் என்ன கூறினார்கள்? உயிர் கொடுங்கள் என்று வேண்டினர்

9078) அன்னை உமையாள் சித்திரத்திற்கு என்ன செய்தாள்?

உயிர் ஊட்டினாள்

9079) உயிர் ஊட்டியதும் இந்த சித்திரம் என்னவாக மாறியது?

அழகான இளைஞனாக

9080) உமையாள் இந்த இளைஞனுக்கு என்ன பெயர் சூட்டினார்?

சித்ர குப்தன்

9081) சித்ர குப்தன் என்று பெயர் சூட்டக் காரணம் என்ன?

சித்திரத்தில் இருந்து வந்ததால்

9082) உமையாள் பின்பு சித்ர குப்தனை என்ன செய்தாள்?

சிவபெருமானிடம் அழைத்துச் சென்று நடந்தவற்றைக் கூறி அவருக்கு ஏதாவது பொறுப்பைக் கொடுக்குமாறு கூறினார்.

9083) அந்தச் சமயத்தில் மரணத்திற்குப் பிறகு உயிர்களின் பாவ புண்ணிய கணக்கை ஆராய்ந்து சொல்ல உதவியாக ஒருவர் வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருந்தவர் யார்?

எமதர்மராஜன்

9084) சிவபெருமான் உடன் என்ன செய்தார்?

சித்ரகுப்தனை எமனின் உதவியாளனாக உயிர்களின் பாவ புண்ணிய கணக்கை எழுதும் பொறுப்பை ஒப்படைத்தார்.

9085) பாவ புண்ணிய கணக்குகள் எப்போது எழுதப்படுகிறது?

ஒவ்வொரு சித்ரா பெளர்ணமி அன்றும்

9086) சித்ரா பெளர்ணமி அன்று விரதத்தை ஆரம்பித்து என்ன செய்ய வேண்டும்?

சித்ரா குப்தாய என்று சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்

9087) பெளர்ணமி நிலவு உதயமானதும் என்ன செய்ய வேண்டும்?

சித்ரகுப்தனுக்கு பூஜை செய்ய வேண்டும். பிறகு பூஜைகளுக்கு முடிந்த அளவிற்கு தானம் செய்ய வேண்டும். பேனா, பென்சில் கொப்பி இவற்றை படிக்கும் ஏழை மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

9088) உப்பு சேர்க்காமல் ஆகாரம் உண்டு விரதம் இருந்தால் என்ன நடக்கும்?

சித்திரகுப்தன் நம் பாவ புண்ணிய கணக்கை எழுதும் போது புண்ணிய கணக்கை அதிகப்படுத்தியும் பாவத்தை குறைத்தும் எழுதுவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812