திங்கள், 30 ஏப்ரல், 2012

அறநெறி அறிவுநொடி கே. ஈஸ்வரலிங்கம், தலைவர்/ஸ்தாபகர் தமிழர் நற்பணி மன்றம் சடங்குகள் 9113) மனித பிறவியில் எத்தனை கட்டமாக கிரியை செய்கின்றனர்? மூன்று 9114) அந்த மூன்று கட்டங்களையும் தருக? பிறப்பிற்கு முன், பிறந்த பின், இறந்த பின் 9115) பிறப்பிற்கு முன், பிறந்த பின், இறந்த பின் என நடத்தப்படும் சடங்குகளை என்னவென்பர்? கிரியை 9116) பெண் கருவுற்ற மூன்று மாதத்தில் செய்யப்படும் சடங்கு என்ன? பும்ஸவனம் 9117) கருவில் இருக்கும் சிசுக்கு எந்த ஊறும் உண்டாகாதவாறு இறைவனை பிரார்த்திக்கும் சடங்கு எது? பும்ஸவனம் 9118) கருவுற்ற பெண்ணுக்கு நான்கு அல்லது எட்டாவது மாதத்தில் செய்யும் சடங்கு என்ன? சீமந்தம் 9119) குழந்தையின் நலன் பொருட்டு சில தேவர்களை வேண்டி செய்யப்படும் சடங்கு என்ன? சீமந்தம் 9120) இந்த சீமந்த சடங்கு தற்போது என்னவாக நடத்தப்படுகிறது? வளைகாப்பு 9121) குழந்தை பிறந்தவுடன் செய்யப்படும் சடங்கு என்ன? ஜாதகர்மம் 9122) இதன்போது என்ன செய்யப்படும்? தேனும் நெய்யும் கலந்து தேவதைகளுக்கு நிவேதிப்பர். 9123) குழந்தைக்கு நீண்ட ஆயுள், புத்தி கொடுக்க பிரார்த்திக்கும் கிரியை எது? ஜாதிகாமம் 9124) குழந்தைக்கு தந்தை வழியிலோ அல்லது தாய் மரபிலோ இறைவன் திருநாமத்தையோ பெயராக சூட்டி மகிழும் நிகழ்ச்சியை என்னவென்பர்? நாமகரணம் 9125 முதல் முறையாக குழந்தையை வீட்டை விட்டு வெளியில் கொண்டு வரும் பொருட்டு, குழந்தையின் யாத்திரைகள் அனைத்தும் மங்களமாக இருக்கச் செய்யும் கிரியை எது? நிஷக்ராமணம் 9126) ஆறு மாதத்தில் சோறும் நெய்யும் தயிரும் தேனும் கொடுத்து குழந்தை நீண்டு வாழ பிரார்த்திப்பதை என்னவென்பர்? அன்னப்பிராசனம் 9127) பள்ளியில் சேர்க்கும் நாளில் செய்யப்படும் சடங்கு என்ன? வித்தியாரம்பம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812