திங்கள், 14 நவம்பர், 2011

அகில இலங்கை சபரிமலை சாஸ்தாபீட மகரNஜhதி விழா



அகில இலங்கை சபரிமலை ஸ்ரீ சாஸ்தாபீடம் நடத்தும் 29வது ஆண்டு 48 நாட்கள் மண்டல பூஜை மகரஜோதிப் பெருவிழா எதிர்வரும் 17 ஆம் திகதி கொழும்பு அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் ஆரம்பமாகும். அன்றுகாலை 6 மணி முதல் மஹா கணபதி ஹோமந் தொடர்ந்து, விரத முத்திரை மாலை அணிதல் இடம்பெறும். அன்று முதல் தினமும் காலை 6 மணி முதல் திருப்பள்ளியெழுச்சி, ஐயப்பன் கவச பாராயணம், ருத்ரபாராயணம் என்பன நடைபெறும். மாலை 6 மணி முதல் ஸ்ரீ ஐயப்பன் திருவிளக்குப் பூஜை, ஸ்ரீ ஐயப்பன் கவச பாராயணம், விஷேட ஐயப்பன் பஜனை 18 படி விசேட தீபாராதனை, ஹரிவராசனம், நடை சாத்துதல், அருட் பிரசாதங்கள் வழங்கல் என்பன இடம்பெறும்.

பிரதி புதன், வெள்ளி, சனிக்கிழமைகளில் மாலை 5 மணி முதல் விசேட நவோத்தர ஸஹஸ்ர (1008) மஹா சங்காபிஷேகம், விஷேட மலையாள பூஜை, அன்னதான பூஜை இடம்பெறும். புதன், வெள்ளி, சனிக்கிழமைகளில் இரவு 9 மணக்கு ஹரிவராசனம் இடம்பெறும்.

இவ்வாலயத்தில் 2011.12.04 ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு மஹிஷ சம்காரம் வேட்டைத் திருவிழாவும் எதிர்வரும் 09 ஆம் திகதி மாலை 5 மணிக்கு (உயிருள்ள) நாகராஜானுக்கு பூஜையும், 16 ஆம் திகதி மாலை 5 மணிக்கு தீபஜோதி – தீச்சட்டி வழிபாடும், 18 ஆம் திகதி காலை 6 மணிக்கு பால் காவடிப் பெருவிழாவும் பால்குட பவனியும், 24 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு மஹா யாகாரம்பமும் இடம்பெறும். இந்த மஹா யாகம் 24 ஆம் திகதி முதல் 9 நாட்களுக்கு இடம்பெறும்.

2011.01.01 ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு மஹாயாக பூர்த்தி, மஹா பூர்ணாகுதி, 02 ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு ஐயப்ப சுவாமி ரதபவனிப் பெருவிழாவும் 2011.01.03 ஆம் திகதி மாலை 5.30 மணி முதல் தீர்த்தத் திருவிழாவும் 2011.01.05 ஆம் திகதி மாலை 6 மணிக்கு கருப்பண்ண சுவாமி பூஜையும் இடம்பெறும்.

கப்பித்தாவத்தை பிரம்மஸ்ரீ பா. ஷண்முகரெத்ன சர்மா, கனடா சாம்பசிவ சோமாஸ்கந்த சிவாச்சாரியார், இணுவில் சிவஸ்ரீ தானு மஹாதேவக் குருக்கள், அவுஸ்திரேலிய சிவஸ்ரீ இராமச்சந்திரன் குரு, திருகோணமலை சிவஸ்ரீ ரவிச்சந்திரக் குருக்கள் ஆகியோரின் ஆசியுடன் கிரியைகள் நடைபெறும்.

தமிழ்நாடு திருவாவடுதுறை ஆதீன 23வது குரு மஹா சன்னிதானம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், நல்லை ஆதீன 2வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சார்ய சுவாமிகள் ஆகியோரின் அருளுரைகளும் இங்கு இடம்பெறும்.

சர்வதேச இந்துமத குருபீடாதிபதி ஸ்ரீ ஐயப்பதாஸ் சாம்பசிவ சிவாச்சாரியாரின் தலைமையில் சாம்பசிவ ஸ்ரீ மணி கண்ட சர்மா பூஜைகளை நடத்துவார்.

ஆலய குரு சிவஸ்ரீ இ. சபாரெத்தினக் குருக்களும் இதில் கலந்து கொள்வார். பிரம்மஸ்ரீக்களான நித்தியானந்த சுதானந்த சர்மா, ந. ஜெகதீஸ்வர சர்மா, சி. பாலசுப்பிரமணிய சர்மா, மோகன காந்த சர்மா ஆகியோர் கா. சாதகாசிரியார்களாக விளங்குவார்கள். 2012.01.04 ஆம் திகதி மாலை 6 மணிக்கு குரு பீடாதிபதியின் 29 வது ஆண்டு பீடரோஹண விழா (குருபூஜை) நடைபெறும்.

ஸ்ரீ சாஸ்தா பீட ஆஸ்தான வித்துவான்களான இராஜமாணிக்கம் ரவிச்சங்கர் குழுவினரும் விமல் – சிவா குழுவினரும் என். புண்ணியமூர்த்தியும் மங்கள இசை வழங்குவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812