திங்கள், 28 நவம்பர், 2011

சனிப்பெயர்க்சி சிலன கூறும் இதழ்



வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பகவான் எதிர்வரும் 2011.12.21 ஆம் திகதி காலை 7.24 மணிக்கு கன்னி ராசியிலிருந்து துலா ராசிக்கு மாறுகிறார்.

துலா ராசிக்கு இடம்பெயரும் சனி பகவான் 2012.03.26 ஆம் திகதி பின்னோக்கி மீண்டும் கன்னி ராசிக்குச் சென்று 2012.12.16 ஆம் திகதி பிற்பகல் 2.44 வரை துலா ராசியிலிலேயே சஞ்சாரம் செய்யவுள்ளார்.
சனி துலா ராசியில் சஞ்சரிக்கும் இக்காலங்களில்,
மேஷ ராசிக்கு கண்ட சனியும்.
கடக ராசிக்கு அர்த்தாஷ்டமி சனியும்
கன்னி ராசிக்கு ஏழரை சனியில் பாத சனியும்
துலா ராசிக்கு ஏழரை சனியில் ஜென்ம சனியும்
விருச்சிக ராசிக்கு ஏழரை சனியில் பாத சனியும்
மகர ராசிக்கு ஜீவன ஸ்தானத்தில் சனியும்
மீன ராசிக்கு அஷ்டம சனியும்
டைபெறவுள்ளது.

இந்த சனிப் பெயர்ச்சியின் காரணமாக ரிஷபம், சிம்மம், தனுசு நேயர்கள் அனுகூலமான பலன்களை அடைவார்கள்.

மிதுனம், கும்பம் ராசி நேயர்களுக்கு மத்தியமமான பலன்கள் ஏற்படும்.

இவ்வாறு சனிப் பெயர்ச்சி பலன்கள் அக்கு வேறாக கணித்து திறம்பட தந்துள்ளார் தமிழ்நாடு, சென்னை, வட பழனி முருகு ஜோதிட ஆராய்ச்சி மையத்தின் பொதுச் செயலாளரும் தமிழகத்தில் ‘நலம் தரும் ஜோதிடம்’ எனும் மாத இதழை வெளியிட்டு வரும் ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்.

இவர் கணித்துக் கூறியுள்ளதை தொகுத்து மாதாந்த, நாளாந்த பஞ்சாங்கக் கலண்டர்களை (நாட்கட்டிகளை) தனி மனிதனாக நின்று வருடாந்தம் வெளியிட்டு வரும் யுனிலங்காஸ் வே. பாலேந்திரா ‘சனிப் பெயர்ச்சி’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளார். தமிழகத்திலிருந்து வெளிவரும் மாதாந்த இதழ்களுக்கு சற்றும் சளைக்காத வண்ணம் அழகுற, சிறப்புற இந்த நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. பொதுவாக தமிழகத்திலிருந்து கொண்டு வரும் பொருளொன்றை இலங்கையில் வாங்குவதாக இருந்தால் தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் விலையில் மும்முடங்கு பெறுமதியான விலையை கொடுத்துத்தான் வாங்க வேண்டுமாம். ஆனால் இந்த சனிப் பெயர்ச்சி இதழ் 80 ரூபா என்ற மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஆலயமொன்றின் மூலஸ்தானத்தில் கொலு இருக்கும் சனீஸ்வரனின் திருவுருவச் சிலையுடன் இராமர், லெட்சுமணர், ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களின் திருவுருப் படங்கள் இந்த இதழின் முன் அட்டையை அலங்கரித்திருக்கிறது.

சனி பகவானைப் பற்றியும் அர்த்தாஷ்டம சனி, கண்ட சனி, ஜீவன சனி, ஏழரை சனி, விரய சனி, ஜென்ம சனி, பாத சனி என சனியின் வகைகளைப் பற்றியும் இவ்வாறான சனிகளின் பலாபலன்களையும் இவர் விரிவாக இந்த இதழில் கூறியுள்ளார். அதுபோல் சனி மாற்றத்தால் ஒவ்வொரு ராசிகாரருக்கும் ஏற்படக்கூடிய பலாபலன்களையும் இவர் கணித்துள்ளார். உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள், அரசியல்வாதிகள், விவசாயிகள், பெண்கள், மாணவர்கள் என சகல பிரிவினருக்கும் இந்த சனிப் பெயர்ச்சியினால் ஏற்படும் பலாபலன்கள் இதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812