திங்கள், 14 நவம்பர், 2011

அறநெறி அறிவுநொடி

(தீபம்)

8759) ஒளி எதனை குறிக்கிறது?

அறிவையும் ஞானத்தையும்.


8760) இருள் எதனை குறிக்கிறது?

அறியாமையையும் அஞ்ஞானத்தையும்.


8761) எல்லா ஞானத்திற்கும் மூலமானவனாகவும் ஒளிமயமானவனாகவும் விளங்குபவன் யார்?

இறைவன்.


8762) தினசரி வீட்டில் ஏன் தீபம் ஏற்றுகிறோம்?

நமது குடும்பங்களில் அறியாமை என்ற இருளகற்றி ஞானம் என்ற ஒளி பரவ வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தீபம் ஏற்றப்படுகிறது.


8763) பிரார்த்தனைக்கேற்ற காலங்களாக விளங்கும் அதிகாலை, மாலை நேரங்களை என்ன காலம் என்று கூறுவார்கள்?

சந்தியா காலங்கள்.


8764) ஆன்மீக மார்க்கத்தில் இவ்வுலகத்தில் பற்றை ஏற்படுத்தும் வாசனைகளாக கருதப்படுபவை எவை?

எண்ணெயும் திரியும்.


8765) தீபம் மூலம் உணர்த்தப்படும் தத்துவம் என்ன?

தீபம் ஒளிரும் போது எண்ணெயும் திரியும் சிறிது சிறிதாக அழிவது போல் ஞானத்தினால் நம் பற்றுகள் எல்லாம் அழிகின்றன என்றும் ஞானம் அவற்றை அழித்த பிறகே ஓய்கிறது என்பதையும் தீபம் மூலம் உணர்த்தப்படுகிறது.


8766) மங்கள சடங்குகள், பொது நிகழ்ச்சிகள் ஆகியவற்றை தீபம் ஏற்றிவிட்டு தொடங்குவது ஏன்?

ஞானாக்கினியான இறைவன் அங்கு இருந்து அவை சிறப்பாக நடைபெற அருள்புரியட்டும் என்ற எண்ணத்தினால் தான்.


8767) இறைவன் ஒளிமயமானவன் என்பதை நினைவில் இருத்திக் கொள்ள நடத்தப்படும் திருவிழா எது?

திருக்கார்த்திகைத் திருவிழா.


8768) ஒளிதரும் சுடரைத் தாங்கும் பொருளை என்னவென்பர்?

விளக்கு


8769) நமது குறிக்கோள் தெளிந்த அறிவு கிடைக்க நம் முன்னோர் ஏற்பாடு செய்த வழிமுறைகளில் ஒன்று எது?

ஒளி வழிபாடு.


8770) ‘விளக்கினை ஏற்றி வெளியினை அறிமின் விளக்கினின் முன்னே வேதனை மாறும்’ என்று கூறியவர்? திருமூலர்


8771) ‘தவராஜ சிங்கம்’ என்று அழைக்கப்படுபவர் யார்?

திருமூலர்


8772) விளக்கினை ஏற்றிப் பிறவி வேதனையை அறுத்தவர் யார்?

கணம்புல்ல நாயனார்.


8773) தன் வீட்டுப் பொருட்களை எல்லாம் விற்றும் விளக்கேற்றுவதை தவறாமல் செய்துவந்தவர் யார்?

கணம்புல்ல நாயனார்.


8774) விற்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில் இவர் என்ன செய்தார்?

வீடுகளில் கூரை போடுவதற்கு உதவும் கணம்புல்லை விற்று விளக்கேற்றி வந்தார்.


8775) ஒருநாள் கணம்புல் ஒன்றும் விற்கப்படாததால் இவர் எதனைக் கொண்டு விளக்கேற்றினார்?

கணம்புல்லைக் கொண்டு.


8776) கணம்புல் நீண்ட நேரம் எரியாமல் அணைந்துவிடும் என்ற எண்ணத்தில் இவர் என்ன செய்தார்?

தன் தலைமுடியை அவிழ்த்து எரித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812