திங்கள், 21 நவம்பர், 2011

நயினாதீவு ஸ்ரீ நாகபூ'ணி அம்பாள் ஆலய திருப்பணிக்கு உதவி கோரல்

வரலாற்றுச் சிறப்புமிக்கதும் வேண்டுவார் வேண்டுவதை மெய்யன்பர்களுக்கு வாரி வழங்கும் திருத்தலமாகவும் சக்தி பீடங்களில் சிறப்பித்துக் கூறப்படுவதுமான நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் ஆகஸ்ட் மாதம் 29, 30, 31 ஆம் திகதிகளில் பாலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற்று திருப்பணி வேலைகள் பாரிய அளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆகம முறைப்படி இவ்வாலய கும்பாபிஷேகம் 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு ஆலயத்திருப் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன.

இவ்வாலயத்தின் உட்பிரகார ஓட்டுக்கூரை பழுதடைந்துள்ளமையால் நிரந்தர சீமெந்துக் கூரையிட்டு ஓட்டினால் மேற்கூரை அமைத்தல்.

இந்த சீமெந்து கூரை திராவிடச் சிற்ப வேலைப்பாடுகளுடன் நவீனமயப்படுத்தப்படுவதுடன் பூவேலைப்பாடுகளுடனான தூண்கள் அமைக்கப்படவுள்ளன.

அம்பாளின் அற்புத அலங்காரத் தோற்றம் கொண்ட 80 திருவுருவச்சிலைகளும் இங்கு பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன. ஆலய சுற்றுமதில் புதுப்பிக்கப்பட்டு 4 அடி உயரமும் 550 அடி நீலமும் கொண்ட கர்ணகூடு சாலகரதும் அமைக்கப்படும்.

ஆலய உட்பிரகாரத்துக்குள் நுழைந்து அண்ணாந்து பார்த்ததும் அம்பாளின் அருள் மகிமையும் அன்பும் அமைதியும் அனைவர் உள்ளங்களிலும் நிறைந்தோடும் வண்ணம் சித்திரவேலைப்பாடுகளுடன் 25 கமலங்கள் அமைக்கப்படவுள்ளன.

மணிமண்டபம் இளைப்பாற்று மண்டபம் என ஆலயத்தின் பெருமைகளை புலப்படுத்தும் வண்ணம் மண்டபங்கள் பலவும் அமைக்கப்படவுள்ளன.

இவ்வாறு பல்வேறு திருப்பணிகள் கூடிய விரையில் ஓரிரு மாதங்களில் நடத்தி முடிக்க வேண்டி இருப்பதால், இதற்கு உதவ விரும்புவோரிடமிருந்து உதவிகள் கோரப்படுகின்றன. இத் திருப்பணிகளை முடிக்க 5 கோடி ரூபா தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது. உதவிகளை பொருளாளர், ஸ்ரீ நாகபூசுணி- அம்மன் கோயில், நயினாதீவு” என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கலாம். அல்லது யாழ்ப்பாண இலங்கை வர்த்தக வங்கி (கணக்கு இல: 1060012330), கொழும்பு வர்த்தக வங்கி (01242628501), ஊர்காவற்றுறை இலங்கை வங்கி (007687860) வைப்புச் செய்யலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812