திங்கள், 12 மார்ச், 2012

அறநெறி அறிவுநொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர்/ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்

8990) பூரண கும்பத்தை மனித உடலாக பாவித்து அதில் இறைவனை தியான, ஜப, பிரார்த்தனையின் மூலம் யாகசாலையில் வைத்து என்ன செய்யப்படுகின்றன?

யாகமும் பூஜைகளும்

8991) சக்திவாய்ந்த மந்திரங்களால் கும்ப நீரு என்ன செய்யப்படுகிறது?

சுத்தி செய்யப்படுகிறது

8992) கும்ப நீர் இவ்வாறு சுத்தி செய்யப்பட்டு என்ன செய்யப்படுகிறது?

தெய்வ ஆவாகனம்

8993) இந்த நீர் கெடாதிருக்க என்ன சேர்க்கப்படுகின்றன?

கராம்பு, ஜாதிக்காய், பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ.

8994) இதில் மாவிலை வைக்கப்படுவது ஏன்?

அஷ்ட லஷ்மிகளின் கடாட்சம் நிறைந்திருக்க

8995) கும்பம் எத்தனை மங்கலப் பொருட்களால் அலங்கரிக்கப்படுகிறது?

எட்டு

8996) அந்த எட்டு மங்கலப் பொருட் களையும் தருக.

தேங்காய், மஞ்சள், குங்குமம், பூ, தர்ப்பை, கூச்சம், ஸ்வர்ணம், அக்ஷதை.

8997 சில இந்துக் கடவுள்களைக் குறிக்கும் பண்புப் பெயராக பயன் படுவது எது?

ஸ்ரீ

8998 ஸ்ரீ என்பது எதைக் குறிக்கும்?

செல்வத்தை

8999 செல்வதுக்கு உரிய கடவுள் யார்?

இலட்சுமி

9000 இலட்சுமி யாரின் துணைவி யார்?

விஷ்ணுவின்

9001 ஸ்ரீதேவி என்னும் பெயர் யாரைக் குறிக்கும்?

இலட்சுமியை

9002 வளத்துக்கு உரிய கடவுள் யார்?

பிள்ளையார்

9003 ஸ்ரீ என்ற பெயர் யாரைக் குறிக்கும்?

பிள்ளையாரை

9004 புனிதத் தன்மை உள்ளவர்கள் என நம்ப ப்படுகிறவர்களின் பெயர்கள் முன் எந்த சொல் சேர்த்து அழைக்கப்படுகிறது?

ஸ்ரீ

9005 வேறு எந்த மதத்தில் “ஸ்ரீ” என்ற சொற் பயன்பாடு காணப்படுகிறது?

பெளத்த சமயத்தில்

9006 பெளத்த சமயத்தில் “ஸ்ரீ” என்ற பதம் இடம்பெறக் காரணம் என்ன?

வடமொழி மற்றும் இந்தியத் தோற்றத்தின் காரணமாக

9007 வணக்கத்துக்குரிய அல்லது பெரு மதிப்பு க்குரிய நபர்களின் பெயருக்கு முன் “ஸ்ரீ” என்ற பதம் ஏன் பயன்படுத்தப்படுகிறது?

பெரு மதிப்பைத் தெரிவிக்கும் முன்னொட்டாக




வவுனியா, சிதம்பரபுரம் (மலைக் கோவில்)
திருப்பழனி முருகன் ஆலயம்

வட மாகாணத்தில் மலை உச்சியில் இருக்கும் ஒரே முருகன் ஆலயம் இது என்பது குறிப்பிடத்தக்கது. வவுனியா நகரில் தெற்கே 14 கிலோ மீட்டர் தொலைவில் சிதம்பரபுரம் எனும் அழகிய கிராமத்தில்தான் இவ் முருகன் ஆலயம் அமைந்துள்ளது. காடு பகுதி என்பதால் யானை, மான், குரங்கு என பல மிருகங்கள் இங்கு இருந்தாலும் 1995 ஆண்டு முதலாவது மக்கள் வீடுகள் அமைத்து குடியேறினார்கள். ஆனால் இம்மலையில் முருகனுடைய கோவில் கட்டுவதற்கு முன் மலை உச்சியில் கல்லில் ஓம் என்ற எழுத்து வடிவம் இருந்ததாக மக்கள் கூறுகிறார்கள்.

1996ஆம் ஆண்டு கட்டுமான பணிகளும் புனர்நிர்மாண வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டன. அதற்குப்பின் கிணறு, வெட்டுதல், மின்சார இணைப்பு வேலைகள் ஆகியன மேற்கொள்ளப்பட்டன. வவுனியா அரசாங்க அதிபர் கே. கணேஸ் ஊடாகவே இவ்வேலைத் திட்டங்களுக்கான நிதி வழங்கப்பட்டது. தொடர்ந்து ஆலய திருப்பணி வேலைகளும் மலை ஏறி செல்வ தற்கான படி கட்டும் வேலைகளும் மேற்கொள்ளப்பட்டன.

வவுனியா பிரதேச செயலாளர் திருமதி துரைசாமி அம்மையாரால் வவுனியா அரசாங்க அதிபர் சன்முகத்தின் ஒத்துழைப்புடனும் ஊர் மக்களின் ஒத்துழைப்புடனும் திருப்பணிகள் முடிக்கப்பட்டன.

மலை அடிவாரத்தில் விநாயகர் ஆலயம், இரண்டு கிணறுகள் மண்டபம் போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளன. முன்னாள் இந்து கலாசார அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தாவின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மலை அடிவாரத்தில் காரியாலயம் ஒன்றும் அமைத்துக் கொடுக்கப்பட்டது. அத்தோடு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் உதவியுடன் பல வேலை திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அது மாத்திரம் அல்லாது கடந்த 11 வருட காலமாக வவுனியா நகரிலுள்ள வர்த்தகர்கள் சங்கம் உதவி வழங்கும் நிறுவனங்கள் பொதுவாக ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் என அனைவருடைய பங்களிப்புடன்தான் இவ்வாலயம் இத்தனை சிறப்பாக அமையப் பெற்றுள்ளது. மலை உச்சியில் இருந்து பார்க்கும் போது கதிர்காமம் கதிரமலை (ஏழுமலை)யில் இருந்து தரிசிப்பது போன்று இருக்கும். ரம்மியமாக காற்று வீசிக் கொண்டுயிருக்கும். மேல் இருந்து வட மாகாணத்தையும் வட மத்திய மாகாணத்தையும் பார்க்கக்கூடியதாக இருக்கும். இவ் மலையில் இருந்து பல மூலிகைச் செடிகள் பறிக்கப்பட்டு இயற்கை மூலிகை எண்ணெய் தயாரிக்கப்படுகின்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க வன்னி மாவட்டத்தில் இவ்வாறான கோவில் அமைந்திருப்பது பலருக்கு தெரியாமல் இருக்கலாம்.

வவுனியா பிரதேச செயலாளரும் ஆலயத்தின் போஷகருமாகிய சிவபாலசுந்தரம், தற்போதைய வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ல்ஸ் ஆகிய இருவரும் இணைந்து “யாத்திரிகர் மலை” என இதற்கு பெயர் சூட்டினார்கள். இவ்வாலயம் மலை உச்சியில் சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது. இவ்விடத்தில் தியான மண்டபம் அமைப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் ஆலய பரிபாலன சபையினர் மேற்கொண்டுள்ளனர்.

சுமார் 650 அடி உயரத்தைக் கொண்ட இம்மலையில் தாகம் தீர்க்க தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா நகரில் இருந்து கோவில் அடிவாரம் வரை அடியார்கள் வருவதற்கு இ.போ.ச., தனியார் பஸ் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாலயத்தில் தினந்தோறும் நித்திய பூஜைகள் கந்தசஷ்டி, தைபூசம், சஷ்டி விரதம் என்பவற்றுடன் ஆடிமாத மகோற்சவம் 15 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும். கதிர்காமம் கொடியேற்றம் நடைபெறும் போது இங்கு கொடியேற்றமும் நடைபெறும்.

ஆகவேதான் இது சின்ன கதிர்காமம் என்று அழைக்கப்படுகின்றது. ஆலய பரிபாலன சபை தலைவர் அ. மாதவன், செயலாளர் செல்வநாயகம் (டாக்டர்), பொருளாளர் இ. பன்னீர் செல்வம், உபதலைவர் இ. ராமசாமி, உபசெயலாளர் மு. வசந்தகுமார், உறுப்பினர்கள்: தி. கிருஷாந்தன், க. தர்மகுலசிங்கம், மு. பஞ்சவர்ணம், இ. முத்தழகு, வி. அழகுமுருகன், டாக்டர் சூரியகுமார் (போஷகர்), சி. தர்மராசா (ஆலோசகர்), திருப்பழனி முருகன் அறநெறி பாடசாலை கடந்த 10 வருடங்கள் நடைபெற்று வருவதோடு, ஆலய நித்திய பூஜைகளை சுப்பிரமணியம் பூசகர், பழனியப்பன் பூசகர் மேற்கொண்டு வருகின்றனர்.

அறநெறி பாடசாலையில் செல்வி. தி. விஜித்ரா, செல்வி. வி. கீர்த்திகா ஆகியோர் ஆசிரியர்களாக கற்பிக்கின்றார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812