வியாழன், 10 ஜூன், 2021

கணபதி

கணபதி மந்திரங்களை எந்த வேளையில் உச்சரிக்கலாம்? பிரம்ம முகூர்த்த வேளையில் பிரம்ம முகூர்த்த வேளை எது? அதிகாலை 4.30 முதல் 6.00-க்குள் கணபதி மந்திரங்களை பிரம்ம முகூர்த்த வேளையில் உச்சரிப்பது மிகவும் நல்லது என எதில் கூறப்பட்டுள்ளது ? கணேச உத்தர தாயினி உபநிஷத்தில் விநாயகரை தேய்பிறை சதுர்த்திதோறும் வழிபடுவதை என்னவென்று கூறுவர்? சங்கடகர சதுர்த்தி சங்கடகர சதுர்த்தி அன்று விநாயகரை எந்த மரத்தடியில் வழிபடுவது மிகவும் நல்லது? வன்னி பிள்ளையார் எத்தனை பெண்களை திருமணம் செய்து கொண்டதாக புராணம் சொல்கிறது? 15 பெண்களை இது எந்த புராணங்களில் காணப்படுகிறது? வடக்கு இந்திய புராணங்களில் அந்த 15 தர்மபத்தினிகள்ளும் யார்? சித்தி, புத்தி, வல்லமை, மோதை, பிரமோதை, சுமகை, சுந்தரி, மனோரனம், மங்கலை, கேசினி, சாந்தை, சாருகாசை, சுமத்திரை, நந்தினி, காமதை. வயது முதிர்ந்த ஆணும் பெண்ணும் ஆரத்தழுவிக் கொண்டிருப்பதை போல உருவம் கொண்ட விநாயகர் சிலைகள் எங்கே காணப்படுகின்றன? ஜப்பான் நாட்டில் இந்த இரு விநாயகர்களையும் வழிபட்டால் என்ன நடக்குமாம்? நீண்ட காலங்கள் வாழலாம் என்று நம்புகின்றனர். ஒவ்வொரு சதுர்த்தியன்றும் விநாயகர் கோவிலுக்கு சென்று கொழுக்கட்டை செய்து தானமளித்தால் என்ன நடக்குமாம்? வறுமைகள் நீங்கி வளம் பெருகுமாம் எத்தனை கொழுக்கட்டைகள் செய்து தானமளித்தால் நல்லது? எட்டு இந்தியாவிலுள்ள சாதூர் அருகே போத்திரெட்டிபட்டி எனும் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் உள்ளவர்கள் விநாயகருக்கு என்ன செய்வார்கள்? இங்கு தீப்பெட்டி செய்வோர் உள்ளனர். ஒவ்வொருவரும் தினமும் ஒரு தீக்குச்சி வீதம் கொளுத்தி வழிபாடு செய்வார்கள். எரித்த குச்சியை வீட்டில் சேமித்து வைப்பார்கள். இவர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள்? விபத்து நேராமல் இவ்விநாயகர் துணை செய்வார் என்பது நம்பிக்கை. முதன் முதலாக விநாயகருக்கு கொழுக்கட்டை படைத்து வழிபட்டவர் யார் என்று தெரியுமா? வசிஷ்டரின் மனைவியான அருந்ததி. வன்னி மரத்தடியில் இருக்கும் விநாயகரை மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திர நாட்களில் வழிபாடு செய்து அன்றைய தினம் ஒன்பது கன்னிப் பெண்களுக்கு அன்னதானம், வஸ்திர தானம் அளித்து வந்தால் என்ன நடக்கும் என்று கூறப்படுகிறது? மாங்கல்ய தோஷம் அகலும், திருமணத்தடையும் நீங்கும். கேது திசை நடக்கையில் அதற்குரிய ஏழு ஆண்டுகளிலும் என்ன நடக்குமாம்? ஆன்மீக நாட்டம் அதிகரிக்குமாம். கேதுவுக்கு உரிய தெய்வம் யார்? விநாயகர் அச்சமயங்களில் கேதுவுக்கு உரிய தெய்வமாக விளங்கும் விநாயகப் பெருமானை வழிபட்டு வந்தால் என்ன நடக்குமாம்?துன்பங்களில் துவளாமல் இன்பமாக அதைக் கடக்கலாமாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812