வியாழன், 10 ஜூன், 2021

தமிழைக் காக்க அன்னை சரஸ்வதியே அடிபணிந்த கதை

கம்பரின் மகன் அம்பிகாபதிக்கும், சோழ மன்னன் மகள் அமராவதிக்கும் காதல் ஏற்படுகிறது. சோழ அரசின் அவைப்புலவரான ஒட்டக்கூத்தர் அவர்கள் இருவரையும் மன்னனிடம் சிக்க வைப்பதற்காக அரண்மனையில் விருந்துக்கு ஏற்பாடு செய்கிறார். விருந்தில் உணவு பரிமாற அமராவதி வந்தவுடன், அவரைக்கண்ட அம்பிகாபதி “இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க வட்டில் சுமந்து மருங்கு அசைய...” என்று தன்னை மறந்து பாடுகின்றார். இதைக்கேட்ட அனைவரும் அதிர்ச்சியுடன் நோக்க சோழ மன்னனுக்கு அதீத கோபம் வருகின்றது. உடனே கம்பர் சரஸ்வதியை மனதில் தியானித்து தன் மகன் அம்பிகாபதியின் பாடலைத் தொடர்ந்து “கொட்டிக் கிழங்கோ கிழங்கு என்று கூவுவாள் தந்நாவில் வழங்கோசை வையம் பெறும்” எனப்பாடி முடிக்கின்றார். இந்த பாடலுக்கு சோழ மன்னன் விளக்கம் கேட்க, அதற்குக் கம்பர் வீதியில் வயதான மூதாட்டி ஒருத்தி வெயில் தாங்க முடியாமல் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து அதனால் அடி கொப்பளித்ததையும் பொருட்படுத்தாது கொட்டிக் கிழங்கு விற்றுக்கொண்டு வீதி வழியாக வருகின்றார்.எனக்கூற, உடனே அரசன் காவலாளியை அழைத்து வீதியில் போய் உண்மை நிலையை அறிந்து வரகூறினார். கம்பரின் வார்த்தையைக் காப்பாற்ற சரஸ்வதி தேவியே கொட்டி கிழங்கு விற்கும் வயோதிகப் பெண்ணாக உருவெடுத்து வீதியில் வர, காவலாளியால் அரசரின் முன் கொண்டு வந்து நிறுத்தப்படுகிறாள். தமிழைக் காக்க அன்னை சரஸ்வதியே அடிபணிகிறார் என்பதையே இக்கதை உணர்த்துகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812