வியாழன், 10 ஜூன், 2021

எல்லோர் வீட்டிலும் காமாட்சி விளக்கு ஏன் ஏற்றபடுகிறது?

திருமண சமயங்களில் கூட, மணமக்கள் கையில் காமாட்சி விளக்கை ஏந்திக்கொண்டு வலம் வரச் சொல்கிறார்கள் நம் வீட்டு பெரியோர்கள். காமாட்சி அம்மனுக்குள் அனைத்து தெய்வங்களும் அடக்கம் என்பதால், ஒவ்வொருவரும் தங்களுடைய குலதெய்வங்களை நினைத்துக் கொண்டு காமாட்சி விளக்கை ஏற்றி வணங்குவது ஐதீகம். இதனால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு காமாட்சி அம்மனுடைய அருளும், அவரவர் குலதெய்வத்தின் ஆசியும் கிடைக்கும் என்பது ஒரு நம்பிக்கை. மேலும், அனைத்து தெய்வங்களின் அருளையும், ஒன்றாகப் பெறுவதற்காகத் தான். திருமண சமயங்களில் கூட, மணமக்கள் கையில் காமாட்சி விளக்கை ஏந்திக்கொண்டு வலம் வரச் சொல்கிறார்கள் நம் வீட்டு பெரியோர்கள். திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்குச் செல்லும் மணப்பெண், அங்கு முதன் முதலில் ஏற்றுவது காமாட்சியம்மன் விளக்கை தான். மேலும் காமாட்சி விளக்கில் குலதெய்வமும் இருந்து அருள்புரிவதால், முதன்முதலில் அந்த விளக்கை ஏற்றுவதன் மூலம் அவர்களின் குலம் தழைத்து வளரும் என்பது நம்பிக்கை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812