வியாழன், 10 ஜூன், 2021

சங்க இலக்கியத்தில் சரவணன் பெருமை

சங்க இலக்கியத்திலும் சரவணன் பெருமை உண்டு. குறிப்பாக, நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படை முழுவதும் கந்தனிடம் நம்மை ஆற்றுப்படுத்தும் காவியம்தான். முருகன் தன் அழகிய மார்பில் கடம்ப மாலை அணிந்திருக்கிறான். அது எப்படிப்பட்ட மாலை? நக்கீரர் அழகு மிளிர விவரிக்கிறார்: கார் கொள் முகத்த கமஞ்சூல் மாமழை வாள்போழ் விசும்பில் வள் உறை சிதறித் தலைப்பெயல் தலை இய தண் நறும் கானத்து இருள்படப் பொதுளிய பராஅரை மராஅத்து உருள்பூத் தண் தார் புரளும் மார்பினன்! மேகம் கடலுக்குச் சென்று தண்ணீரை முகந்துகொள்கிறது. அதனால், அது கருமை நிறத்தைப் பெற்றுக் கர்ப்பம் அடைகிறது. அதனை மின்னல் வெட்ட, வானத்தில் மழையாகப் பெய்கிறது. அப்படிப் பெய்த முதல் மழை காட்டைக் குளிர்ச்சியாக்குகிறது, நல்ல மணம் வீசச் செய்கிறது. அந்தக் காட்டில் அடர்த்தியான, செறிவான, பெரிதான செங்கடம்ப மரம் இருக்கிறது. அதில் அழகிய பூக்கள் மலர்கின்றன. அவற்றைத் தொகுத்துக் கட்டிய மாலையை அணிந்த திருமார்பு முருகனுடையது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812