வியாழன், 10 ஜூன், 2021

ஆனி திருமஞ்சனம்

ஆனி மாதம் பல விரத சிறப்புகளை உள்ளடக்கியது. இந்த மாதத்தில் நிறைய நிகழ்வுகள் நடந்ததாக புராணங்கள் சொல்கின்றன. உத்தராயன புண்ணிய காலத்தின் கடைசி மாதமாக, ஆனி மாதம் விளங்குகிறது. இது தேவர்களின் மாலைப் பொழுது என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. பூலோகத்தில் இந்த மாதத்தில் இளவேனிற் காலமாக இருக்கும். கோடையின் தாக்கம் நீங்கி, இதமான காற்று வீசும் மாதம் இது. ஆனி மாதம் பல விரத சிறப்புகளை உள்ளடக்கியது. வட மொழியில் இந்த மாதத்தை ‘ஜேஷ்ட மாதம்’ என்று அழைப்பார்கள். இதற்கு ‘மூத்த’ அல்லது ‘பெரிய’ என்று பொருள். இந்த மாதத்தில் நிறைய நிகழ்வுகள் நடந்ததாக புராணங்கள் சொல்கின்றன. ஆனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரம் அன்று, மாலை வேளையில் நடராஜருக்கு திருமஞ்சனம் நடைபெறும். இதனை ‘ஆனி திருமஞ்சனம்’ என்று அழைப்பார்கள். அன்றைய தினம் விரதம் இருந்து வழிபாடு செய்தால் எண்ணங்கள் ஈடோறும். இந்த ஆனி மாத பௌர்ணமி தினம் பொதுவாக கேட்டை நட்சத்திர தினத்தில் வருகின்றது. ஆனி மாத பௌர்ணமி தினத்தன்று காரைக்காலில் காரைக்கால் அம்மையாரின் தெய்வீக ஆற்றலை போற்றும் விதமாக வருடந்தோறும் மாங்கனி திருவிழா நடைபெறுகிறது. மேலும் கோயில்களில் இறைவனுக்கு முக்கனிகள் படைத்து பூஜைகள் மற்றும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன. ஆனி பௌர்ணமியில் தங்களின் இஷ்ட தெய்வங்களுக்கு பூஜைகள், வழிபாடுகள் செய்வது மிகவும் சிறந்த பலன்களை தரும். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆனி பௌர்ணமி தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருந்து, தெய்வங்களை வழிபடுவதால் அந்த தெய்வத்தின் பரிபூரண ஆசிகள் உங்களுக்கு கிடைக்கும். குறிப்பாக ஆனி பௌர்ணமியில் கிருஷ்ண பகவானுக்கும், கற்புக்கரசியான சாவித்திரி தேவிக்கும் விரதம் இருந்து வழிபாடு செய்வது சிறப்பானதாகும். முன்னிரவு வேளையில் வானில் தோன்றும் சந்திர பகவானை தரிசித்து வழிபடுவது மிகவும் சிறந்தது. ஆனி மாதம் பௌர்ணமி தினத்தில் மேற்கூறிய முறையில் விரதம் இருந்து தெய்வங்களுக்கு பூஜை செய்து வழிபடுபவர்களுக்கு ஐஸ்வர்யங்கள் பெருகும். பெண்களின் கணவர்களின் ஆயுள்பலம் கூடும். விரும்பிய நபரையே மணமுடிக்கும் அமைப்பு உண்டாகும். நீண்ட காலமாக புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். மாணவர்கள் விரும்பிய உயர் கல்வியை கற்கும் சூழல் ஏற்படும். கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீள்வார்கள். உணவு, உடை ஆகியவற்றிற்கு கஷ்டப்படும் நிலை ஏற்படாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812