புதன், 12 மே, 2021

அறநெறி அறிவு நொடி

222 சிவராத்திரி என்ற சொல்லுக்கு உரிய பொருள் என்ன? மோக்ஷம் தருவது என பொருள் பெறும். ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு திதி உண்டு. ஈஸ்வரனுக்குரிய திதி என்ன? இறுதி திதியான சதுர்த்தசி திதி ஆகும். இவருக்கு இந்த திதி வரக் காரணம் என்ன? சிவன் அழிக்கும் கடவுள். எல்லா உயிர்களும் தங்கள் வாழ்வின் இறுதியில் அவரையே அடைகின்றன என்பதால் இந்த இறுதி திதியை அவருக்கு ஒதுக்கினார்கள். மகிமை மிக்க மகா சிவராத்திரி எப்போது வரும்? மாசி மாதம் தேய்பிறையில் வரும் சதுர்த்தசி இரவில் சிவராத்திரியில் மூன்றாம் காலத்தை என்னவென்று அழைப்பார்கள்? லிங்கோத்பவ காலம் என்பார்கள். இந்த சிறப்பு வாய்ந்த தருணம் பற்றி கூறுவதானால்....? சிவபெருமான் சிவலிங்கத்தினின்று திருவுருவம் கொண்டு வெளிப்பட்டு, அருவுருவமாக நின்று அன்பர்களுக்கு அருள்பாலித்த நேரமாகும். நெருப்புச் சுடரின் மையத்தில் தோன்றியவர் யார்? சிவபெருமான் சிவபெருமானை ஆயிரம் ஆயிரம் நாமங்களைச் சொல்லி அர்ச்சித்தவர்கள் யார்? பிரமனும் திருமாலும் அதனை நினைவுகூரும் வகையில் என்ன செய்ய வேண்டும்? உருத்திரருக்கு எண்ணில்லாத வணக்கங்களைக் கூறும் ருத்திரத்தை ஓத வேண்டும்.விரதத்தின் போதும், கிரியைகள் செய்யும் போதும் தர்ப்பை அணிவது ஏன்? தர்ப்பைப் புல்லுக்கு மற்றைய புற்களைப் போலல்லாது விஷேச குணம் ஒன்றுள்ளது. அதாவது மின்சாரத்தை எல்லா உலோகங்களும் கடத்தக் கூடியவை. ஆனால் அவற்றுள் செப்பு-உலோகம் அதனை வெகு சுலபமாக கடத்தும் வல்லமை கொண்டுள்ளது. அதனால்தான் அதனை மின் பாவனையின் போது அதிகமாக பயன் படுத்துகின்றார்கள். அது போலவே தர்ப்பைப் புல்லுக்கும் கிரியைகளின் போது சொல்லப் பெறும் மந்திரங்கள் கிரகிக்கும் தன்மையும், அதனை அணிந்திருப்பவருக்கு போசிக்கும் திறனும் கொண்டுள்ளது. அதனால் கிரியைகளின் போது சொல்லப் பெற்ற மந்திரங்களின் முழுச் சக்தியும் அதனை அணிந்திருப்பவருக்கு கிடைக்கின்றது. அருகம்புல் மாலை ஏன்? அனலாசுரன் என்ற அசுரன் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். தன்னை எதிர்ப்பவர்களை அனலாய் மாற்றித் தகித்து விடுவான். இவனை பிரம்மாவாலும் ,தேவேந்திரனாலும் அடக்க முடியவில்லை. அவர்கள் சிவ, பார்வதியைச் சந்தித்து முறையிட்டனர். சிவனும் விநாயகருக்கு அந்த அரக்கனை அழித்து வரும்படி கட்டளையிட்டார். விநாயகரும் பூத கணங்களுடன் போருக்குச் சென்றார். அங்கு சென்றதும் அனலாசுரன் பூதகணங்களை எரித்துச் சாம்பலாக்கினான். விநாயகர் அனலாசுரனுடன் மோதினார். ஆனால் அவனை வெற்றி கொள்ள முடியவில்லை. கோபத்தில் அவனை அப்படியே விழுங்கி விட்டார். வயிற்றுக்குள் சென்ற அனலாசுரன் அதை வெப்பமடையச் செய்தான். விநாயகருக்கு அந்த வெப்பத்தைத் தாங்க முடியவில்லை. அவருக்கு குடம் குடமாகக் கங்கை நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை. இந்நிலையில் ஒரு முனிவர் அருகம்புல்லைக் கொண்டு வந்து விநாயகரின் தலை மேல் வைத்தார். அவரது எரிச்சல் அடங்கியது. அனலாசுரனும் வயிற்றுக்குள் ஜீரணமாகி விட்டான். அன்று முதல் தன்னை அருகம்புல் கொண்டு அர்ச்சிக்க வேண்டுமென விநாயகர் கட்டளையிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812