புதன், 12 மே, 2021

வெண்பா படத்தின் நாயகி நயோமி

சாதிக்க வேண்டுமெனில் பிரச்சினைகளை கண்டு பயப்படக் கூடாது ***** வெண்பா படத்தின் நாயகி நயோமி ************ ஊடகத்துறை மீதான மோகம் இன்று பல இளம் யுவதிகளுக்கு ஏற்பட்டுள்ளதன் விளைவாக இலத்திரனில் ஊடகங்ளை நாடி வருகின்ற இளம்பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகைளில் ஊடகத்துறையில் பிரவேசிப்பதற்கு முயற்சித்து அது தொடர்பாக பல்வேறு பயிற்சிளையும் பெற்றுள்ளதுடன் அது தொடர்பாக கற்று வருபவர் கண்டி, தெல்தொட்டையைப் பிறப்பிடமாகக் கொண்ட கன்னிப் பெண் கணநேஷா நயோமி. இவரது தாயாரின் பெயர் மனோன்மணி. கண்டி மலைமகள் இந்து மத்திய கல்லுாரியில் கல்வி பயி்ன்ற இவருக்கு, ஒரு அக்காவும் ஒரு தம்பியும் உள்ளனர். ஊடகத்துறையில் ஏற்பட்ட மோகத்தால் அத்துறைக்குள் பிரவேசிப்பதற்காக பணம் செலவழித்து பல பாடநெறிகளை பயின்றாலும் அதற்கான வாயப்பு அவருக்கு எட்டக்கனியாகவே இருந்து வந்துள்ளது. தொடர்ந்தும் இருந்து வருகின்றது. எனினும் அதற்கான முயற்சியை மட்டும் கைவிடாது தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார். இதில் கரையை கண்டுவிடலாம் என்று எண்ணத்துடன் தொடர்ந்து அது சார்ந்த துறைகளில் ஈடுபட்டு வருகின்றார். அவரை அண்மையில் பேட்டி கண்போது அவர் அளித்த விபரங்கள் வருமாறு உங்களுக்கு கதை எழுத உந்து சக்தியாக இருந்தது எது? நான் கதை எழுத மாட்டேன். அப்படி என்றால் நீங்கள் நடித்த குறுந்திரைப்படத்திற்குரிய கதை யாருடையது? நீங்கள் முதன் முதலாக நடித்தது எந்த குறும்படத்தில்? உயிர் எழுதும் மடல் எப்போது நடித்தீர்கள்? அப்போது வயது எத்தனை? 2019இல், அப்போது வயது 20 அதற்கான வாப்பு எப்படி கிடைத்தது? கெப்பிட்டல் எப்எம்மில் வேர்க் பன்ற அண்ணா மூலம் கெப்பிட்டலில் என்னவாக வேலை செய்தீங்கள்? நான் வேலை செய்யவில்லை. எனக்கு தெரிந்த அண்ணா ஒருவர் வேலை செய்கிறார். அவர எப்படி தெரியும்? எனக்கு ஊடகத்துறையில் ஆர்வம் ஏற்பட்டது. அதன் மூலம் போது தெரியும். ஊடகத்துறையில் ஆர்வம் ஏற்பட காரணம் என்ன? நான் சிறுவயது முதல் எனக்குள் ஒரு ஆசை ஏற்பட்டது. நானும் . நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க வேண்டும் என்று. ஊடகத்துறை தொடா்பாக பயிற்சி அளிக்க வந்தவரா அவர்? ஆம் நீங்கள் பெற்ற பயிற்சி என்ன? எவ்வளவு காலம் பயிற்சி பெற்றீங்கள்? ஆறு மாதம் எவ்வளவு காசு அறவிட்டார்கள்? ஹட்டன், ஹில் கொலெஜ் 10,000 ரூபா. மாவனல்லை ஜே. எம். மீடியா கொலெஜ் 19,000 ரூபா. நீங்கள் பெற்ற பயிற்சி என்ன? ஒரு நிகழ்ச்சியை எவ்வாறு தொகுக்க வேண்டும். நிகழ்ச்சியை மக்களுக்கு எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும். செய்தி வாசிப்பு. அந்த பயிற்சி பெற்றதால் தொழில் ஏதும் கிடைத்ததா? ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்பு கிடைத்தது. எந்த தொலைகாட்சி நிறுவனத்தில்? யாழ்ப்பாணம் தீ தொலைக்காட்சி நிறுவனத்தில் என்ன வாயப்பு? ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக தீ தொலைகாட்சியில் எவ்வளவு காலம் வேலை செய்தீங்கள்? மூன்று மாதங்கள் தொடர்ந்து என்னென்ன குறுந்திரைப்படங்களில் நடித்தீங்கள் என்னுடைய முதலாவது படைப்பு உயிர் எழுத்து மடல். ஆனால் திரையிடப்படவில்லை, அடுத்து மான்யா என்ற முழு நீள படத்தில் ஒப்பந்தமாகியுள்ளேன். அடுத்த படியாக வெண்பா என்ற குறுந்திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தேன். இத்திரைப்படம் யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியிடப்பட்டது. இதில் நடித்தத்திற்கு உங்களுக்கு காசு கொடுத்தார்களா? முதல் படைப்புக்கு இல்லை பாடசாலையில் படிக்கும்போது மேடை நாடகங்களில் நடித்தது உண்டா? ஆம் உங்கள் நடிப்பை பார்த்து உற்சாகப்படுத்தியவர்கள் யாராவது உண்டா? ஆம். வெண்பா குறுந்திரைப்படத்தை பார்த்தவர்கள். அதில் வாழ்த்தியவர்கள். என்னுடைய நண்பர்களான சி.வி லாக்ஸ், மற்றும் அருன், அக்கே ரானில், மற்றும் பிரகாஷ், பானு, ரிசான். தர்சன் மற்றும் ரசிகர்கள், and fan's அது திரையிடப்படாததற்கு காரணம் என்ன? முறையாக எடுக்கப்படவில்லை அது யாருடைய படம்? அன்சார் இதில் நடித்ததற்கு காசு கொடுத்தார்களா? வெண்பா படத்திற்கு தந்தாங்க எவ்வளவு என்று சொல்ல முடியுமா? பதில் இல்லை முதன் முதலாக நடிப்புக்கு காசு கிடைத்ததும் உங்களுடைய மனநிலை எப்படி இருந்தது? மகிழ்ச்சியாக இருந்தது. இப்ப உங்கள் வயது எத்தனை 22 இப்ப என்ன படத்தில் நடிக்கிறீங்கள்? வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் இன்னும் திகதி அறிவிக்க வில்லை. முதன் முதலாக உங்கள் முகத்தை திரையில் பாா்த்தபோது எப்படி இருந்தது? நானும் திரைக்கு வந்தது விட்டேன் என்று மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். யாரையாவது காதலிக்கிறீங்களா? இல்லை. கல்யாணம் எப்போது? தற்போது அதற்கு ஆசை இல்லை. ஆனால் கண்டிப்பாக ஒரு நாள் நடைபெறும். எப்படிபட்ட மாப்பிள்ளையை எதிர்பாா்க்கிறீங்க? நல்ல மனம், நல்ல குணம், எப்போதும் எனக்கு துணையாக நிற்க வேண்டும். இன்பம் துன்பம் என்றாலும் கூடவே இருக்கணும். என்ன தொழில் செய்பவரை எதிர்பாா்க்கிறீங்கள்? நல்ல தொழில் என்றால் நல்லம். ஊடகத்துறைக்கு நுழைய விரும்பும் உங்களைப் போன்ற இளம் பெண்களுக்கு நீங்க என்ன சொல்ல விரும்புகிறீங்கள்? பெண்கள் என்றால் நிறைய பிரச்சினைகள் வரும். ஆனால் பிரச்சினைகளை கண்டு பயப்படக் கூடாது. அதுவும் ஊடகத்துறை என்றால் நிறைய பேர் கூறும் விடயம், ஊடகத்துறை என்றால் நிறைய பிரச்சினை வரும். அதனால் நீ போக வேண்டாம் என்று கூறி பெண்களை மட்டம் தட்டுவார்கள். உண்மையாக ஊடகத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால், பிரச்சினைகளை கண்டு பயப்பட வேண்டாம். எதிர்த்து போராடுங்கள். மேலும் ஊடகத்துறை பற்றி பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அதில் கலந்து கொண்டு உங்களுடைய திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள். அதுமட்டுமல்ல நீங்களும் வீட்டில் இருக்கின்ற நேரத்தில் பல பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள் இந்தத் துறையில் உரிய பயிற்சி கிடைத்தது என்று நீங்கள திருப்தி அடைகின்றீங்கள்? இந்த பயிற்சியில் பெற்ற சான்றிதழ்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று எண்ணுகிறீங்களா? கண்டிப்பாக அப்படியென்றால் உங்களுக்கு ஏன் இன்னும் அந்த பாக்கியம் கிடைக்கவில்லை. கிடைத்தது. ஆனால் அதற்கு ஏற்ற காசு கிடைக்கவில்லை. நான் மீண்டும் முயற்சி செய்து வருகின்றேன். பொருத்தமான ஒன்று கிடைக்கும் வரை கிடைத்ததை வைத்து முன்னுக்கு வந்திருக்கலாம் அல்லவா? ம்,,,,ம் அப்படியென்றால் ஏன் அந்த வாய்ப்பை நழுவ விட்டீங்கள்? கொடுப்பனவு பிரச்சினை அதுதான். அது தனியார் துறையா? அப்படியென்றால் அந்த சான்றிதழுக்கு அரச அங்கீகாரம் இல்லை என்பதை ஒத்துக் கொள்கிறீங்களா? அப்படியில்லை கண்டிப்பாக கிடைக்கும். நான் இன்னும் அதற்கு முயற்சி செய்யவில்லை. ம்... விழுந்தாலும் மீசையில மண் ஒட்டவில்லை என்பது போல் இருக்கு உங்கள் கருத்து...! ம்..... ஊடகத்துறையில் நீங்கள் சந்தித்த சங்கடங்கள் என்ன? நிகழ்ச்சிகள் செய்யும்போது நேரங்களை கவனிப்பதில் சில சிக்கல்கள் ஏற்பட்டன. நேரம் எவ்வளவு முக்கியமோ அதுபோல பேச்சுத் திறனும் முக்கியம். ஆண்களால் தொல்லைகள் ஏதும் ஏற்பட்டதுண்டா...? ஆம் . பெண்கள் என்றால் நிச்சயமாக ஆண்களின் பிரச்சினை வரும். நீங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் என்ன? காதல் வலை தான் காதலிப்பதாக தொந்தரவுகள் தந்தார்களா? ஆம் இவர்களைப் பற்றி என்ன சொல்ல வுிரும்புகிறீங்கள்? முதலில் பெண்களுடைய இலட்சியம் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இதை புரிந்து கொள்ளாமல் காதல்வலை வீச வேண்டாம். வார்த்தைகளால் மட்டும்தான் தொந்தரவுகள் ஏற்பட்டதா? ஓம் இவ்வாறான தொந்தரவுகளுக்கு முகம் கொடுத்த நீங்களே இளம் பெண்களுக்கு இத்துறையில் பிரவேசிக்கலாம் என்று அறுவுரை கூறுவது சரியா? அதுதான் நான் சொல்றேன் பிரச்சினைகள் வருதுன்னு சொல்லி பயப்படகூடாது. வேண்டாம். எல்லாத்துக்கும் பயந்தால் எங்கள் கனவு நிறைவேறாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812