ஞாயிறு, 16 மே, 2021

விநாயகர்

யானையை அடக்கும் கருவிகள் என்னென்ன? பாசமும் அங்குசமும், விநாயகர் தன் கையில் பாசாங்குசத்தை ஏந்தி இருப்பது ஏன்? தன்னை அடக்குவார் ஒருவரும் இலர் என்ற குறிப்பை உணர்த்துவதற்கே ஆகும். அகில உலகங்களும் விநாயகருடைய மணி வயிற்றில் அடங்கிக் கிடப்ப என்ற குறிப்பை உணர்த்துவது எது? அவருடைய மத்தள வயிறு புலப்படுத்துகின்றது. அவரது கும்பம் ஏந்திய கை எதை புலப்படுத்துகிறது? படைக்கும் தொழிலை மோதகம் ஏந்திய கை எதை புலப்படுத்துகிறது? காத்தல் தொழிலை அங்குசம் ஏந்திய கரம் எதை புலப்படுத்துகிறது? அழித்தல் தொழிலை பாசம் ஏந்திய கரம் எதை புலப்படுத்துகிறது? மறைத்தல் தொழிலை தந்தம் ஏந்திய கரம் எதை புலப்படுத்துகிறது? அருளல் தொழிலை விநாயகர் புரியும் ஐம்பெருந் தொழில்களை எவ்வாறு அழைப்பார்கள்? சிருஷ்டி, திதி, சங்காரம், திரௌபவம், அனுக்கிரகம் விநாயகர் தாய் தந்தையரை அன்புடன் வழிபட்டதால் ஏற்பட்ட பெயர் என்ன? பிள்ளையார். பிள்ளையார் என்ற பெயர் எப்படி ஏற்பட்டது? பிள்ளை என்ற பெயருடன் ஆர் என்ற பன்மை விகுதி பெற்றுப் பிள்ளையார் என்று பேர் பெற்றுள்ளது. அருகம்புல் வைத்து விநாயகரை வழிபட்டால் என்ன பயன்? பிறவிப் பிணி நீங்கி, இன்பம் பெருகும். விநாயகருக்கு என்னென்ன நிவேதனம் செய்யலாம்? கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலியன வைத்து நிவேதனம் செய்ய வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812