புதன், 12 மே, 2021

அறநெறி

எந்த நேரங்களில் நதிகளில் குளிக்கக்கூடாது இரவு ஒன்பது மணி முதல் அதிகாலைமூன்று மணிவரை, நதிகளில் குளிக்கக்கூடாது. அமாவாசை அன்று வேறு வீடுகளில் சாப்பிடலாமா? முடிந்தவரை நமது வீட்டில் தான் சாப்பிடவேண்டும். முடிந்தால் அமாவாசை அன்று என்ன செய்தால் நல்லது? நமது வீட்டிற்கு அடுத்தவரை அழைத்து உணவு அளிப்பது பெரும் புண்ணியம். கோவில்களில் சூடம் மற்றும் தீபத்தை கைகளில் ஏற்றி காண்பிக்கலாமா? கூடாது காயத்ரி மந்திரத்தை எப்படி பட்ட இடத்தில் ஜபிக்க வேண்டும்? சுத்தமான இடத்தில் தான் பிரயாணத்தின் போது சொல்லலாமா? சொல்வதைத் தவிர்க்க வேண்டும். இறைவனுக்கு சூடம் காண்பிக்கும்போது, இறைவனின் காலிற்கு எத்தனை தடவை சுத்தி காண்பிக்கவேண்டும்? நான்கு முகத்துக்கு எத்தனை தடவை சுத்தி காண்பிக்கவேண்டும்? ஒரு தடவை கடைசியாக என்ன செய்ய வேண்டும்? முழு உருவத்துக்கும் சுத்தி காண்பிக்கவேண்டும். முழு உருவத்துக்கும் எத்தனை தடவை காண்பிக்கவேண்டும்? மூன்று தடவை வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லலாமா? செல்லக்கூடாது எரியும் விளக்கில் உள்ள எண்ணெய்யை அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் நல்லதா? கூடாது. ஆன்மீகத்தில் உயர்வான நிலையை ஒருவர் அடைய வேண்டுமெனில் முதலில் அழியவேண்டியது எது? அகங்காரம் முக்திக்கான முதல் படி எங்கே தொடங்கும்? எப்போது நான் என்கிற தன்மை அழிகிறதோ அங்கே இதற்கான ஒரு செயல்முறையாக நம் முன்னோர்கள் எதனை வழக்கமாக வைத்திருந்தனர். நம்மை விட மூத்தவர்களின் காலில் விழுவதை ஒருவரை வணங்குகிற போது எவற்றையெல்லாம் நாம் வணங்குகிறோம்? வணங்கப்படுபவரின் வயது, ஞானம், சாதனை, அனுபவம் ஆகிய சகலவிதமான நல்லாற்றலையும் நாம் வணங்குகிறோம். இவ்வாறு அவர்களுக்கு நாம் அளிக்கிற மரியாதையில், நன்றியில் என்ன நடக்கும்? அவர்கள் மனம் குளிர்ந்து எழும் நல்லாற்றலே நம்மை ஆசியாக வந்து அடைகிறது. ஆசி என்பது என்ன? ஒருவரின் நல்லாற்றல் நமக்கு பகிர்ந்தளிக்கப்படுவதே ஆகும். ஆசி வழங்குவோர் வாங்குவோரின் தலையில் கைவைத்து ஆசி வழங்குவது வழக்கமாக இருக்கிறது. இதன் பொருள் என்ன? அவரிடம் இருக்கும் நல்லாற்றலை ஆசி வாங்குபவருக்கு அவர் வழங்குகிறார் என்பதே ஆகும். இதனை உளவியல் ரீதியாக ஆராய்ந்தால் என்னவென்று சொல்லலாம்? ஒருவருக்கு மரியாதை செய்வதும், நன்றியை வெளிப்படுத்துவதும் நல்லறமாகும். ஒரு மனிதரின் மொத்த எடையையும் தாங்கி நிற்கிற பாதத்தில் ஒருவர் பணிகிற போது என்ன நடக்கும்? பணிபவரின் அகங்காரம் அழிகிறது. அவருடைய நான் எனும் தன்மை அங்கே அழிந்து போகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812