புதன், 12 மே, 2021

‘ஓம் நம சிவாயா’

77 ‘ஓம் நம சிவாயா’ என்ற மந்திரம் எத்தகைய சிறப்பு வாய்ந்தது? மன வேதனைகளையும், கவலைகளையும் நீக்க வல்லது. ‘ஓம் நம சிவாயா’ என்ற வார்த்தையை மனதினிலேயே சொல்லி பழகுவதால் ஏற்படும் நன்மை என்ன? அது சிறந்த ஆக்கபூர்வ அலைகளை நம்முள் நிரந்தமாக்கி விடும். ‘ஓம் நம சிவாயா’ என்ற நாமத்தை உச்சரிப்பதால் ஏற்படும் வேறு பலன்கள் என்ன? இந்த நாமம் ஒலியின் ஒலி. ஆத்ம சுத்தம் செய்யும் ஆன்ம கீதம். உங்கள் உள் ஒளிந்து கிடக்கும் சக்திகளை வெளி கொணரும் பிராண நாமம். இது வேதத்தின் இருதயம். நம்மை புனிதப்படுத்தும் சப்தம். நாமம், காம, க்ரோத, மோகங்களை அழிக்கும் நாமம். பிறப்பினை அழிக்கும் நாமம் என சொல்லிக் கொண்டே போகலாம். இது வார்த்தை ஜால பேச்சல்ல. வாழ்வின் உண்மை. ‘ஓம் நம சிவாயா’- என்ற தொடரின் பொருள் என்ன? நான் சிவ பிரானை வணங்குகிறேன் என்பதாகும், நம சிவாய என்பதில் உள்ள "ந" என்பது என்ன? ந-நிலம், நம சிவாய என்பதில் உள்ள "சி" என்பது என்ன? சி-அக்னி, நம சிவாய என்பதில் உள்ள "வா" என்பது என்ன? வா-காற்று, நம சிவாய என்பதில் உள்ள "ய" என்பது என்ன? ய-ஆகாயம் பஞ்ச பூதங்களின் அதிபதி யார்? சிவபிரான் . இந்த மந்திரம் எந்த அருளினைப் பெற்றுத் தரும்? இந்த மந்திரம் அளிக்கும் வேறு அருள்கள் என்ன? மனிதன் மனதில் இருக்கும் அனைத்து பயங்களையும் நீக்கும். * மனிதனை நோய்களிலிருந்து காக்கின்றது. * மனிதன் சிந்தனை, செயலினை தெளிவாக்குகின்றது. * வாழ்க்கை வழியினை நற்பாதையில் திருப்பி விடுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812