புதன், 12 மே, 2021

சித்திரை

சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாள் எது? சித்திரை முதல் நாள் ஆகும். சித்திரை மாத்தின் முதல் நாளின் சிறப்பு என்ன? பூமியை பிரம்மா படைத்ததாக புராணம் சொல்கிறது. சிலப்பதிகாரத்தில் பூம் புகாரில் இந்திர விழா எப்பொழுது நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. சித்ரா பௌர்ணமி அன்று நடந்ததாக சித்திரை மாதத்தில் தாகத்தில் இருப்பவர்களுக்கு மோர் குடிக்கக் கொடுத்தால் என்ன பலன் கிடைக்கும்? ஜென்மாந்திர பாவங்கள் விலகும். சர்க்கரை கலந்து பானகம் குடிக்கக் கொடுத்தால் என்ன நடக்கும்? வைகுண்ட வாசம் கிடைக்கும் என்று புராணம் சொல்கிறது. சித்ரா பௌர்ணமி திதி யாருக்கு உகந்தது? தேவர்களுக்கு சித்திரை மாதம் திருதியை அன்று பகவான் விஷ்ணு என்ன அவதாரம் எடுத்தார்? மீனாக (மச்சம்) ஆகவே, அன்று என்ன ஜெயந்தி கொண்டாடப்படுகிறது? மத்ஸ்ப ஜெயந்தி லட்சுமி தேவி வைகுண்ட லோகத்திலிருந்து எப்பொழுது பூமிக்கு வந்ததாகப் புராணம் சொல்கிறது? சித்திரை மாத சுக்ல பட்ச பஞ்சமியில் சித்திரை மாத சுக்ல அஷ்டமியில் யார் பிறந்ததாகக் கூறப்படுகிறது? அம்பிகை எமதர்மனின் கணக்காரன சித்ர குப்தன் தோன்றியது எப்போது? சித்திரை மாத பெளர்ணமி நாளில்தான். அதே மாதத்தில், சித்திரை நட்சத்திர தினத்தன்று வேறு என்ன நடந்த்து? நீலாதேவி மற்றும் கர்ணிகாம்பா ஆகியோரை சித்ரகுப்தன் மணந்ததாகப் புராணம் சொல்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812