ஞாயிறு, 15 நவம்பர், 2020

தமிழ் நாடக விழா -2020

டவர் மண்டப அரங்க மன்றம் இலங்கையின் நாடகத்துறைக்கான மத்திய நிலையமாக விளங்குகின்றது. நாடகக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும் நாடகத் துறையை மேம்படுத்தும் நோக்குடனும் இந்நிறுவனம் நாடக விழாவை நடத்தி வருகின்றது. கடந்த இரண்டு மாதங்களாக சிங்கள நெடு நாடகங்கள், குறுநாடகங்கள், சிறுவர் நாடகங்கள் என 70துக்கும் மேற்பட்ட நாடகங்கள் மருதானை டவர் அரங்கிலும் எல்பின்ஸ்டன் அரங்கிலும் மேடை ஏற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து இந் நிறுவனத்தின் தமிழ்த் துறை பணிப்பாளர் கலாநிதி சண்முகசர்மா ஜெயப்பிரகாஷின் செயற்பாட்டால் கடந்த 3ஆம் திகதிமுதல் மருதானை எல்பின்ஸ்டன் அரங்கில் தமிழ் நாடக விழா நடைபெற்று வருகின்றது. இந்நிகழ்வில் 19 குறுநாடகங்களும் 5 நெடுநாடகங்களும் மேடை ஏறுகின்றன. கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு போன்ற இலங்கையின் நாலா புறங்களிலிருந்தும் 300 மேற்பட்ட கலைஞர்கள் இதில் பங்குகொள்கின்றனர். கொழும்பில் நடைபெறும் இவ்விழாவைத் தொடர்ந்து இந்த நாடகவிழா யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் நடைபெறவுள்ளது. இந்த நாடக விழாவில் கடந்த 03ஆம் திகதி கே.சீலனின் “சிம்ஹாவின் கனிந்த இரவு”, ரி.அயூரனின் “வண்டிப்பயணம்”, கே.சீலனின் “அடையாளம்” கடந்த 04 ஆம் திகதி ரி. தர்மலிங்கத்தின் “காரல்”, ஏ.இளங்கோவின் “நிதர்சனம்” கே.செல்வராஜனின் “சந்தேக்கனவுகள்” , ரி. தர்மலிங்கத்தின் “சடுக்குவேலி” ஆகிய நாடகங்கள் மேடையேற்றப்பட்டன. இன்று 5ஆம் திகதி இன்று ஒக்டோபர் 05 ஆம் திகதி ரி.தர்மலிங்கத்தின் “ஆடவள்”, ஆர்.லோகநாதனின் “இப்படி ஒரு நாள்” ரி.தர்மலிங்கத்தின் “வரைவாளி” ரி. தர்மலிங்கத்தின் “குருவிச்சை” ஆகிய நாடகங்கள் மேடையேற்றப்படவுள்ளன. "இப்படி ஒரு நாள்" என்ற நாடகத்தில் நடிக்கும் நடிகையான செல்வராஜ் லீலாவதி நாடகத்துறையில் 16 வருடம் அனுபவமுள்ளவர். சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், ஒப்பனையாளர், ஆடை வடிவமைப்பாளர், நாடக எழுத்தாளர் என்ற எல்லா பிரிவுகளிலும் தேசிய மற்றும் இளைஞர் விருதுகளை வென்றவர். அரங்கச் செயற்பாட்டாளரான இவர் , 2019 ஆம் ஆண்டு சிறிலங்கா, ஜப்பான் சிநேகபூர்வ விருதான "புங்கா" விருதை வென்றவர். இந்நாடகத்தில் நடிக்கும் முருகேசு அஜந்தன் சாந்தகுமார் நாடகத்துறையில் 16 வருடம் அனுபவம் பெற்றவர், அரங்க ஒளியமைப்பு தொடர்பாக சர்வதேச அளவில் பயிற்சிகளை மேற்கொண்டவர். இத்துறைக்காக அரச மற்றும் இளைஞர் விருதுகளை வென்றவர் சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றுள்ளார். நாடகங்களையும் இயக்கியுள்ளார் நாடக உபகரணங்கள் காட்சி வடிவமைப்புகளிலும் கைத்தேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை 6 ஆம் திகதி நாளை ஒக்டோபர் 06 ஆம் திகதி ரி.டக்ளஸின் “மனதில் உறுதி வேண்டும்”, மொழிவாணனின் “அரச பணிக்காக மட்டும்”, பி.சிவா பிரதீபனின் “வந்தவன்”, ஏ.இளங்கோவின் “கொவிட்-19” ஆகிய நாடகங்கள் மேடையேற்றப்படவுள்ளன. "அரச பணிக்காக மட்டும்" என்ற நாடகத்தில் சிரேஷ்ட கலைஞர் ரஞ்சனி ராஜ் மோகன்,கலை ஸ்ரீ, தேவர் முனிவர்,விஜய், ஸ்ரீ பாலன், திவாகரன் ஆகியோர் நடிக்கிறார்கள். நீங்களும் இந்த நாடகத்தைப் பார்த்தால், வித்தியாசமான ஒரு அனுபவத்தைப் பெற்ற பாக்கியம் உங்களுக்கும் கிடைக்கும் என்று இதற்கு கதை வசனம் எழுதிய கலைஞர் மொழிவாணன் குறிப்பிட்டுள்ளார். 7ஆம் திகதி நாளை மறுதினம் ஒக்டோபர் 07ஆம் திகதி ஆர்.ஏன்.ஆர். அரவிந்தின் “கட்டை விரல்”, ஆர்.ஏன். ஆர்.அரவிந்தின் “நினைவெல்லாம்” ஆர் ஸ்ரீகாந்தின் “அங்கீகாரம்”, ஆர்.ஏன்.ஆர். அரவிந்தின் “போலிமுகம்” போன்ற குறு நாடகங்கள் மேடை ஏறுகின்றன. நெடும் நாடகங்கள் 2020 ஓக்டோபர் 8 ஆம் திகதி ஆர்.கிங்ஸிலியின் “தற்கொலை” ஒக்டோபர் 9ஆம் திகதி தர்னபிஹேரவின் “விளம்பரம் ஒட்டக்கூடாது”, ஓக்டோபர் 10 ஆம் திகதி சிவா பிரதீபனின் “வினை விதைத்தவன்”, ஓக்டோபர் 12ஆம் திகதி ராதாமேத்தாவின் வ(ர)ம்பு, ஓக்டோபர் 13ஆம் திகதி சுபாஷினியின் “அவஸ்தை” போன்ற நெடும் நாடகங்களும் மேடையேறவுள்ளன. இலவசமாக நடத்தப்படவுள்ள இவ்விழாவில் தமிழ் நாடகக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ரசிகபெருமக்கள் பெருவாரியாகக் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். கே. ஈஸ்வரலிங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812