ஞாயிறு, 15 நவம்பர், 2020

மலர்ந்தும் மலராத தமிழ் நாடக விழா

கொவிட் 19 வைரஸ் அச்சுறுத்தல் காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட கலைஞர்களை வலுவூட்ட "டவர் மண்டப அரங்க மன்றம்" சகோதர மொழி நாடகங்களை மேடையேற்றியது போல் "தமிழ் நாடக விழா 2020" விழாவை நடத்த ஏற்பாடு செய்தது. இந்நிகழ்வில் 19 குறுநாடகங்கள், 5 நெடுநாடகங்கள் மேடை ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு போன்ற இலங்கையின் நாலா புறங்களிலிருந்தும் 300 மேற்பட்ட கலைஞர்கள் இதில் பங்குகொள்ளவிருந்தனர். அதற்கமைய தமிழ் நாடக விழா கடந்த 3ஆம் திகதி டவர் மண்டப அரங்க மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் டக்ளஸ் சிறிவர்தன தலைமையில் மருதானை எல்பிஸ்டன் அரங்கில் ஆரம்பமாகி நடந்து வந்தது. 2020 ஒக்டோபர் 03ஆம் திகதி கே.சீலனின் “சிம்ஹாவின் கனிந்த இரவு”, ரி.அயூரனின் “வண்டிப்பயணம்”, கே.சீலனின் “அடையாளம்” என்ற நாடகங்களும் மேடையேற்றப்பட்டன. ஒக்டோபர் 04 ஆம் திகதி ரி. தர்மலிங்கத்தின் “காரல்”, ஏ.இளங்கோவின் “நிதர்சனம்” கே.செல்வராஜனின் “சந்தேக்கனவுகள்” , ரி. தர்மலிங்கத்தின் “சடுக்குவேலி”யும் மேடையேற்றப்பட்டன. "கண்ணகி கலாலயம்" படைப்பாக ஆ.இளங்கோவின் கதை, வசன, இயக்க, நடிப்பில் ச.பிரதீப்குமார் தயாரிப்பில் கடந்த (04 - 10 - 2020) ஞாயிற்றுக்கிழமை "நிதர்சனம்" குறுநாடகம் மேடையேறியது. எமது கலைஞர்களின் அடிப்படை பிரச்சினைகளை நகைச்சுவை கலந்த தொணியில் இந் நாடகம் படைக்கப்பட்டிருந்தது. கலாபூஷணம் கே. செல்வராஜன் இயக்கத்தில் சிலோன் யுனைட்டட் ஆர்ட் ஸ்ரேஜ் வழங்கிய "சந்தேக கனவுகள்" நாடகத்தில் கலாபூஷணம் மல்லிகா கீர்த்தி, பூ. மார்கிரட், எஸ். சரவணா, ஆர். சசிகுமார் ஆகியோர் நடித்திருந்தனர். கணவன் மனைவிக்கிடையே காலம் காலமாக தொடர்ந்து வரும் சந்தேகப் பேயை விரட்டும் விதமான கதையாக இது அமைந்திருந்தது. ஜனரஞ்சக எழுத்தாளர் மொழிவாணன் கதை வசனம் எழுதியிருந்தார். இதற்கான இசையை ஏ. சந்திரதாஸ் வழங்கியிருந்தார். ஒப்பனை மல்லிகா கீர்த்தி, அரங்க நிர்வாகம் மற்றும் தயாரிப்பு கலைஞர் பொன் பத்மநாதன் . ஒக்டோபர் 05 ஆம் திகதி ரி.தர்மலிங்கத்தின் “ஆடவள்”, ஆர்.லோகநாதனின் “இப்படி ஒரு நாள்” ரி.தர்மலிங்கத்தின் “வரைவாளி” ரி. தர்மலிங்கத்தின் “குருவிச்சை”யும் மேடையேற்றப்பட்டன. இந்நிலையில் நாட்டில் பரவுகின்ற கொரோனா வைரஸ் காரணமாக டவர் மண்டப அரங்க மன்றம் நடத்தி வந்த தமிழ் நாடக விழா பிற்போடப்பட்டுள்ளது என டவர் மண்டபம் அறிவித்தது. கலைஞர்கள், ரசிகர்களின் பாதுகாப்பு கருதி அரசாங்க உத்தரவின் பிரகாரம் டவர் மண்டப அரங்க மன்றத்தின் பணிப்பாளா நாயகம் டக்களஸ் சிறிவர்தனவின் தலைமையில் நிருவாக சபை கூடி இந்நாடக விழா பிற்போடப்பட்டுள்ளது என்பதை அறியத்தந்தது. மீண்டும் நாட்டில் சுமுகமான நிலைவரம் வரும்போது அதனை மீண்டும் தொடர்ந்து மேடையேற்றவும் இந்நிருவாக சபை முடிவு செய்துள்ளது. இதனை கலைஞர்ளுக்கும் பார்வையாளர்களுக்கும் மக்களுக்கும் அறிவித்துக் கொள்வதாக டவர் மண்டப அரங்க மன்றத்தின் பணிப்பாளர் (தமிழ் பிரிவு) கலாநிதி. சண்முக சர்மா ஜெயப்பிரகாஷ் தெரிவித்தார். ஒக்டோபர் 06 ஆம் திகதி ரி.டக்ளஸின் “மனதில் உறுதி வேண்டும்”, மொழிவாணனின் “அரசபணிக்காக மட்டும்”, பி.சிவபிரதீபனின் “வந்தவன்”, ஏ.இளங்கோவின் “கொவிட்-19”, ஒக்டோபர் 07ஆம் திகதி ஆர்.ஏன்.ஆர். அரவிந்தின் “கட்டை விரல்”, ஆர்.ஏன். ஆர்.அரவிந்தின் “நினைவெல்லாம்” ஆர் ஸ்ரீகாந்தின் “அங்கீகாரம்”, ஆர்.ஏன்.ஆர். அரவிந்தின் “போலிமுகம்” போன்ற குறு நாடகங்கள் மேடை ஏறவிருந்தன. 2020 ஓக்டோபர் 8 ஆம் திகதி ஆர்.கிங்ஸிலியின் “தற்கொலை” ஒக்டோபர் 9ஆம் திகதி தர்னபிஹேரவின் “விளம்பரம் ஒட்டக்கூடாது”, ஒக்டோபர் 10 ஆம் திகதி சிவா பிரதீபனின் “வினை விதைத்தவன்”, ஒக்டோபர் 12ஆம் திகதி ராதாமேத்தாவின் வ(ர)ம்பு, ஒக்டோபர் 13ஆம் திகதி சுபாஷினியின் “அவஸ்தை” போன்ற நெடும் நாடகங்களும் மேடையேறவிருந்தன. கே. ஈஸ்வரலிங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812